கொஞ்சும் தமிழில்..ரசிகர்களுடன் இன்ஸ்டா நேரலையில்.. ஐஸ்வர்யா மேனன்!
சென்னை: இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அழகாக பதிலளித்தார் ஐஸ்வர்யா மேனன்,
Recommended Video
தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்புடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹீரோயின்கள் பிரபலமாகியுள்ளனர், ஆனாலும் அவர்களில் சிலரின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
இப்போது நிலைமை வேறு ஒரு சில படம் நடித்தாலே சமூகவலையதளத்தின் மூலம் பல ஹீரோயின்கள் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் "நான் சிரித்தால்" பட நாயகி ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனும் இணையத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது .

எப்போதும் பிஸி
தமிழ் படம் 2, வீரா போன்ற சில படங்களில் நடித்தாலும் அவர் அவ்வளவு அதிமாக பெயர் தெரியப்படவில்லை. சமீபத்தில் அவர் நடித்த "நான் சிரித்தால்" படத்தின் மூலம் அனைவராலும் பேசப்பட்டார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து பிரபலங்களும் இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் பிஸியாகத்தான் இருக்கின்றனர். சமீபத்தில் தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய ஐஸ்வர்யா மேனன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

கொஞ்சும் தமிழில் ஹாய்
நேரலையை தொடங்கிய உடன் ஆங்கிலத்தில் அதிகமாக பேசினார் ஐஸ்வர்யா மேனன். பின்னர், ரசிகர் ஒருவர் கேட்டுக்கொண்டதால் ஆங்கிலம் கலந்த கொஞ்சும் தமிழில் பேசத் தொடங்கினார். பின்னர் அனைவருக்கும் ஹாய் சொன்னதுடன், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அழகாக பதில் அளித்தார். ரசிகர்கள் பலரும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றனர், அவர்கள் அனைவருக்கும் அழகான சிரிப்பில் நன்றியும் தெரிவித்தார்.

தினமும் யோகா
நீங்கள் நன்றாக யோகா செய்கிறீர்கள், தினமும் செய்வீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கண்டிப்பாக தினமும் யோகா செய்வேன் நீங்களும் கட்டாயம் யோகா செய்யுங்கள். உடலை, ஆரோக்கியமாக ஃபிட்டாக வைத்துக்கொள்ள யோகா உதவும் என்றார். நீங்களும் தினமும் யோகா செய்யுங்கள் என்றார். இந்த லாக்டவுன் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை இங்கு சென்னையில் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

என் முதல் காதல்
எனவே அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறினார். பின்னர் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் கூறிய ஐஸ்வர்யா, பொறியியல் படித்த கல்லூரி அனுபவத்தையும், தன் முதல் காதல் என அனைத்தையும் கலகலவென பகிர்ந்து கொண்டார். சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் படித்தேன், என்னுடைய முதல் க்ரஷ் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது இன்று நினைத்தாலும் பசுமையான நினைவாக இருக்கிறது என்றார்.

விஜய் ரசிகை
அதன் பின்னர் ஹிப் ஹாப் ஆதியுடன் லைவ் செய்யுங்கள் என்றதற்கு கண்டிப்பாக அவரிடம் கேட்கிறேன் என்றார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றதற்கு நான் தீவிரமான விஜய் ஃபேன் என்றார். பின்னர், தான் அதிகமாக வெப் சீரிஸ் பார்ப்பதாகவும் அதில் அவருக்கு மிகவும் பிடித்தது மனி ஹீஸ்ட் தான் என்றும் கூறினார்.

வீட்டில் இருங்கள்
இவ்வாறு தன்னை பற்றியும் தனக்கு பிடித்தமானவற்றையும் பேசிய இவர். கொரோனாவால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும், ரசிகர்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்புடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த சூழ்நிலையில் மிக விரைவில் சரியாகி நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப, தான் பிராத்தனை செய்து கொள்வதாகவும் கூறினார். இவ்வாறு நேரலையில் பேசிய ஐஸ்வர்யா மேனன், மே 8ந் தேதி தனது பிறந்த நாள் வருவதாகவும் கூறினார்.

மே 8 தேதி பிறந்த நாள்
இத்துடன் தன் லைவ் சேட்டை முடித்து கொண்ட ஐஸ்வர்யா . புது புது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டார், அவர் வெளியிட்ட சிறு நேரத்திலேயே அவரது ரசிகர்கள் நல்ல கமெண்ட்ஸ் கொடுத்தனர். அவர் வெளியிடும் அணைத்து புகைப்படங்களும் அனைவராலும் பேசப்படும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஆமையுடன் எடுத்த புகைப்படம் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











