என்ன பொண்ணுடா இது... மெலடி பாடலுக்கு வேற மாரி கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்
சென்னை : தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். சென்னையில் பிறந்து, வளர்ந்தவரான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் நடிகையானார்.

தொடர்ந்து தமிழில் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பெரிய அளவில் இவருக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
இருந்தாலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவான ஐஸ்வர்யா, தொடர்ந்து கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி இணையத்தை கலக்கி வந்தார். உடல் வளைவுகளை அப்பட்டமாக காட்டி புடவையில் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட் மிக பிரபலம். இவர் எப்போது ஃபோட்டோ வெளியிடுவார் என்றே ரசிகர்கள் பலர் காத்துகிடக்கின்றனர்.
பெரும்பாலும் மாடர்ன் உடைகளிலேயே கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தும் ஐஸ்வர்யா மேனன் தற்போது வித்தியாசமாக, மெலடி பாடல் ஒலிக்க, வித்தியாசமான கிளாமர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
நாசர், ரேவதி நடித்த அவதாரம் படத்தில் வரும் புகழ்பெற்ற ஹிட் பாடலான தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடல் ஒலிக்க, மாம்பழ கலர் புடவையில் தனது முன்னழகு, பின்னழகு, இடையழகு, காதோரம் கம்மல் ஆடும் நடனம் சுற்றிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
ஐஸ்வர்யா மேனனின் அழகை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுதம்மா என்ற கேப்ஷனுடன் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள அழகிய வீடியோவை பார்த்து விட்டு, ஐய்யோ மீண்டும் மீண்டுமா. லக் யூ, ப்யூட்டி ஃபுல், என்ன பொண்ணுடா இது, கிக்கேற்றும் அழகு என விதவிதமாக வர்ணித்து கமெண்ட் பகுதியை நிரப்பி வருகின்றனர்.
கிக்கேற்றும் லுக்கில், செம அழகாக ஐஸ்வர்யா மேனனை பார்த்து விட்டு, இவர் இவ்வளவு அழகா என பலர் வியந்து பாராட்டி வருகிறார். இன்னும் பலர், நான் உங்களின் தீவிர ரசிகன் ஆகி விட்டேன் என ஜொல்லு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











