ரெட் கலர் டாப்.. பின்னாடி அருவி.. இன்னாம்மா ஹாட்டா இருக்காரு நம்ம ஐஸ்வர்யா மேனன்!

சென்னை: 'தமிழ்படம் 2' நாயகி ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படங்கள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என குறுகிய காலத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

அருவிக்கு அருகே இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது #IswaryaMenon என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்ப் பொண்ணு

தமிழ்ப் பொண்ணு

அப்பா, அம்மா கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஐஸ்வர்யா மேனன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் தான். பெயருக்கு பின்னால் தான் மேனன் இருக்கிறது. ஆனால், ஆளு பக்கா தமிழ்ப் பொண்ணு தான். சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படித்த இவர் சினிமா வாய்ப்புகள் வரவே நடிகையாக மாறினார்.

காதலில் சொதப்புவது எப்படி

காதலில் சொதப்புவது எப்படி

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த், அமலா பால் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ்ப்படம் 2

தமிழ்ப்படம் 2

கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் சிவாவுக்கு ஜோடியாக தமிழ்ப்படம் 2ல் நடித்ததன் மூலமாகத்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நாயகியாக பிரபலமானார் ஐஸ்வர்யா மேனன். அந்த படத்தில் ரம்யா, காயத்ரி மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கலிஸி என பல கெட்டப்களில் இவரும் கலக்கி இருப்பார்.

ஹிப் ஹாப் ஆதியுடன்

ஹிப் ஹாப் ஆதியுடன்

இந்த ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தால்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். "எனக்கு பிரேக்கப்" பாடலில் இவர் ஆடும் குத்தாட்டம் ரசிகர்களை வேற லெவலில் ரசிக்க வைத்தது. கலவையான விமர்சனங்களுடன் அந்த படம் சுமாராக ஓடியது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டிங்கில்

டிரெண்டிங்கில்

இந்நிலையில், அருவிக்கு அருகே சிகப்பு நிற டாப் மற்றும் பேன்ட் அணிந்து ரெட் ஹாட் பேபியாக இவர் கொடுத்திருக்கும் ஹாட் போஸ் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. டிவிட்டரில் ஒரு படி மேலே போய், #IswaryaMenon என்ற ஹாஷ்டேக்கையே உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X