பூஜா ஹெக்டே காட்டில் செம மழைதான் போங்க.. அடுத்து இந்த ஹீரோவுக்கு ஜோடியா?

சென்னை: முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தைத் தொடர்ந்து கோலிவுட்டிலிருந்து ஒதுங்கிய அவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிஸியானார். சூழல் இப்படி இருக்க பீஸ்ட் படத்தில் நடித்து தமிழுக்கு மீண்டும் வந்தார். விஜய்க்கு ஜோடியாக ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கும் பூஜா; கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட பூஜா ஹெக்டே; மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 2012ஆம் ஆண்டு ஜீவாவை வைத்து மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பூஜாவுக்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லை. சொல்லப்போனால் தமிழ் ரசிகர்களும், திரைத்துறையினரும் அவரை மறந்தே போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிஸியான பூஜா ஹெக்டே: தெலுங்கில் அவர் நடித்த முதல் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அதேசமயம் பூஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில் ஹிந்தியிலும் அவர் தனது என்ட்ரியை கொடுத்தார். ஆனால் அந்தப் படமும் ஓரளவுதான் வரவேற்பை பெற்றதன் காரணமாக அங்கும் வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். தமிழும், ஹிந்தியும் பூஜாவை கைவிட்டாலும் தெலுங்கு அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதனையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் தமிழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஜோராக தொடங்கினார்.

It has been reported that Pooja Hegde will be paired opposite Dhanush
Photo Credit:

ஹிந்தியில் படு பிஸி: இதற்கிடையே ராதேஷ்யாம் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது. அதனையடுத்து ஹிந்தியிலும் பிஸியாகியிருக்கிறார் பூஜா. அதன்படி அவர், ஹவுஸ்ஃபுல் 4, கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் தமிழில் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவெடுத்தார். அதற்கு தகுந்தபடி வாய்ப்புகளும் அவருக்கு அமைய தொடங்கின.

தமிழில் வளர்ச்சி: கோலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் இரண்டாவது இன்னிங்ஸ் செல்வ செழிப்பாகவே இருக்கிறது. பீஸ்ட் படத்துக்கு பிறகு சூர்யாவோடு ரெட்ரோ படத்தில் நடித்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும்; அதில் இடம்பெற்ற கனிமா பாடலுக்கு பூஜா போட்ட ஆட்டம் பட்டித்தொட்டியெங்கும் ட்ரெண்டானது. இப்போது அவர் ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவருகிறார். நிச்சயம் இப்படம் அவருக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பூஜா.

காட்டில் மழைதான்: நடிப்பதோடு மட்டுமின்றி ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். அந்தவகையில் கூலி படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். சமீபத்தில்தான் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படி படு பிஸியாக இருக்கும் பூஜா சமீபத்தில் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.'

தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?: அந்தவகையில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தனுஷை வைத்து போர் தொழில் இயக்குநர் இயக்கும் படத்தில்தான் பூஜா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் அவருக்கு இப்படமாவது வெற்றியை கொடுக்குமா என்ற முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. தோல்வி படங்களில் நடித்தாலும் பூஜாவுக்கு வாய்ப்புகள் கொட்டுவதை பார்த்து திரையுலகமும் ஆச்சரியத்தில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X