தமன்னா இல்லை.. லட்சுமி மேனனும் இல்லை... சிவகார்த்திக்கேயனின் ஜோடி கீர்த்தி சுரேஷ்?

By Mayura Akilan

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் தற்போது ‘காக்கி சட்டை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன்ராம்தான் இதனை இயக்குகிறார்.

சிவா ஜோடி யாரு?

சிவா ஜோடி யாரு?

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா, லக்ஷ்மி மேனன், தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இறுதியில் இப்போது மலையாள நடிகை கீர்த்தி சுரேஷை நாயகியாக தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்கிறார்கள்.

நடிகை மேனகாவின் மகள்

நடிகை மேனகாவின் மகள்

எண்பதுகளில் பிரபலமாக இருந்த நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரம் டூ குமரி

குழந்தை நட்சத்திரம் டூ குமரி

2000 ஆம் ஆண்டு பைலட் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

மானே தேனே பேயே...

மானே தேனே பேயே...

தற்போது தமிழில் மானே தேனே பேயே என்ற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் வெளியாகும் முன்பே கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சமுத்திரக்கனி, ராஜ்கிரண்

சமுத்திரக்கனி, ராஜ்கிரண்

இந்தப் படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பவர்ஃபுல் வில்லன் கேர்கடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறாராம்.

மதுரையில் ரஜினி முருகன்

மதுரையில் ரஜினி முருகன்

மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகும் ரஜினி முருகன் படத்தின் படப்படிப்பு நவம்பர் மாத இறுதியில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X