twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கும், ஆரவுக்கும் இடையே என்ன உறவு?: உண்மையை போட்டுடைத்த ஓவியா

    By Siva
    |

    Recommended Video

    ஓவியாகும் ஆரவுக்கும் இடையேயான உறவு- ஓவியா விளக்கம்- வீடியோ

    சென்னை: தனக்கும், ஆரவுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார் ஓவியா.

    பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள்.
    ஜோடியாக வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பம்.
    இந்நிலையில் ஓவியா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    பட வாய்ப்பு

    பட வாய்ப்பு

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. என்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் நான் ஒப்புக் கொள்வது இல்லை. எனக்கு பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். என் சினிமா பயணத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. நான் எடுக்கும் முடிவுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் பிசியாகுபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றனன. சில படங்களை நான் தேர்வு செய்துள்ளேன்.

    ஆரவ்

    ஆரவ்

    எனக்கும் ஆரவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர் மீது அக்கறை உள்ளது. அவருக்கும் என் மீது அப்படி தான். அவர் அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். நான் என் படங்களில் கவனம் செலுத்துகிறேன். இந்த உறவுக்கு பெயர் நட்பு என்று நான் கூற மாட்டேன். ஏதாவது இருந்தால் நான் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்.

    90 எம்எல்

    90 எம்எல்

    களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்எல் ஆகிய மூன்று படங்களுமே வித்தியாசமானவை. காஞ்சனா 3 படத்தில் நான் காமெடி செய்துள்ளேன். காமெடி பண்ணுவது எளிது அல்ல. 90 எம்எல் படத்தில் ஒரு ஹீரோ செய்யும் அனைத்தையும் செய்துள்ளேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Oviya said that she doesn't want to name the relationship between her and Arav as friendship.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X