ஐடி ரெய்டா... அதெல்லாம் வழக்கமான நடைமுறைதான்... சொல்கிறார் நடிகை ராஷ்மிகா

By

ஐதராபாத்: வருமான வரித்துறை ரெய்டு என்பது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா

Recommended Video

சந்தனுக்கு நான் SWEET SISTER | ACTRESS GOWRI KISHAN CHAT PART-01 | FILMIBEAT TAMIL

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது. பின்னர் பிசியாகிவிட்ட ராஷ்மி, தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.

தமிழில் சுல்தான்

தமிழில் சுல்தான்

மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

வருமான வரி சோதனை

வருமான வரி சோதனை

இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாருடன் சென்று சோதனை நடத்தினர். அப்போது நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை.

சொத்து ஆவணங்கள்

சொத்து ஆவணங்கள்

வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது.

வழக்கமானது

வழக்கமானது

விராஜ்பேட்டையில் உள்ள ரஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனை குறித்து ராஷ்மிகாவிடம் கேட்டபோது ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார். பின்னர், இது வழக்கமான வருமான வரி நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.

வளர்கிறேன்

வளர்கிறேன்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இல்லை. இப்போதுதான் வளர்ந்துவருகிறேன். இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X