வருமான வரி செலுத்தலையாமே... கார்த்தி பட ஹீரோயின் வீட்டில் அதிரடி ரெய்டு

ஐதராபாத்: பிரபல இளம் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பிசியாகிவிட்ட ராஷ்மி, தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இவர் 'அவனே ஶ்ரீமன்நாராயணா' என்ற படத்தில் நடித்த கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

திருமணத்தை உதறினார்

திருமணத்தை உதறினார்

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், தெலுங்கில் பிசியானதால் திருமணத்தை உதறினார் ராஷ்மிகா. இது கன்னட, தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தமிழில் சுல்தான்

தமிழில் சுல்தான்

மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

இந்நிலையில், இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் ராஷ்மிகாவின் வீடு உள்ளது. அங்கு சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்ன கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X