twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிப்பது கௌரவம்: வித்யா பாலன்

    By Siva
    |

    மும்பை: எம். எஸ். சுப்புலக்ஷ்மியாக நடிப்பது கௌரவம் என்று தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.

    கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ராஜீவ் மேனன் படம் எடுக்கிறார். இதில் எம்.எஸ்.ஸாக நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளனர். அவர் பதிலே சொல்லாததால் வித்யா பாலன் அந்த இடத்திற்கு வந்துவிட்டார். இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இது குறித்து வித்யா கூறுகையில்,

    மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்களில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியும் ஒருவர். பாதி நாடே தினமும் காலையில் அவரது சுப்ரபாதத்தை கேட்டு தான் கண் விழிக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த கௌரவம். இது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. முடிவானதும் தெரிவிக்கிறேன் என்றார்.

    எம்.எஸ்ஸும், வித்யாவும்

    எம்.எஸ்ஸும், வித்யாவும்

    எம்.எஸ்.ஸின் இசை சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. அவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

    எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

    எம்.எஸ். பற்றிய படம் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது.

    தி டர்ட்டி பிக்சருக்காக தேசிய விருது வாங்கிய வித்யா

    தி டர்ட்டி பிக்சருக்காக தேசிய விருது வாங்கிய வித்யா

    வித்யா பாலன் தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

    சில்க் வித்யாவா எம்.எஸ்ஸா நடிப்பது?

    சில்க் வித்யாவா எம்.எஸ்ஸா நடிப்பது?

    தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்காக படுகவர்ச்சி காட்டி நடித்த வித்யா பாலன் எம்.எஸ்.ஸாக நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    English summary
    "MS Subbulakshmi was one of the greatest exponents of Carnatic classical music. Half of the country or more have woken up to her suprabhatam for decades now. If I do get to play her I will be extremely honoured, said Vidya Balan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X