ஒரு நாளில் இரு படங்கள்... புதுமுகம் மோனல் கஜ்ஜாருக்கு அடித்த யோகம்!
மோனல் கஜ்ஜார்... தமிழ் சினிமாவுக்கு நேற்று முதல் அறிமுகமாகியிருக்கும் புது நாயகி இவர்.
இவரது ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ளது கோடம்பாக்கத்தில். எடுத்த எடுப்பில் இரண்டு பெரிய படங்களில் நாயகி. அந்த இரு படங்களுமே ஒரே நாளில் ரிலீசாவது எத்தனை ஹீரோயின்களுக்கு வாய்க்கும்!
மோனல் கஜ்ஜாருக்கு அது வாய்த்திருக்கிறது.
வானவராயன் வல்லவராயன் படத்தில் அவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். புது நடிகை என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகவும் நடித்துள்ளார்.

சிகரம் தொடு
நேற்று வெளியான சிகரம் தொடு படத்திலும் மோனல் கஜ்ஜார்தான். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து நல்ல பெயரையும் பெற்றுவிட்டார்.

குஜராத் அழகி
மோனல் கஜ்ஜார் குஜராத்தைச் சேர்ந்தவர். வங்கிப் பணியாளராக இருந்தவர், அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வென்றார்.

தெலுங்கில்
அந்தப் புகழ் அவருக்கு தெலுங்குப் பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 2012-ல் சுடிகாடு என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மாய், வெண்ணிலா போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்தில் டிராகுலா என்ற படத்தில் நடித்தார்.

தமிழில்..
இந்தப் படங்களைப் பார்த்துதான் மோனலுக்கு முதல் வாய்ப்பை வழங்கினார்கள் வானவராயன் வல்லவராயன் படத்தில். அடுத்து சிகரம் தொடு. இரண்டு படங்களும் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டாலும், இதோ அதோ என இழுத்து, கடைசியில் ஒரே நேரத்தில் வெளியாகிவிட்டன.


Click it and Unblock the Notifications











