தீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை??
நடிகை தீபிகா படுகோனேக்கும் ரன்வீர் சிங்குக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: நடிகை தீபிகா படுகோனேக்கும் ரன்வீர் சிங்குக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த பத்மாவதி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பத்மாவதி' படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானார் தீபிகா படுகோன்.

கொலை மிரட்டல்
இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்தார் தீபிகா. ஆனாலும் அசராமல் துணிச்சலாக பிரச்சனைகளை எதிர்கொண்டார் தீபிகா படுகோன்.

ரன்வீருடன் காதல்
இதே படத்தில் வில்லனாக வந்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளிவந்தன.

திருமண ஏற்பாடுகள்
இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோன்-ரன்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

இத்தாலியில் திருமணம்
வரும் நவம்பர் 20ஆம் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

30 பேருக்கு மட்டும் அழைப்பு
திருமணத்திற்கு மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளனர். திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு நடிகர்-நடிகைகளை அழைத்து மும்பையில் திருமண வரவேற்பை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டு உள்ளனர்.

இத்தாலி அரசு உறுதி
நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் இத்தாலியில் தான் திருமணம் நடந்தது. இத்தாலி அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளதாக மணமக்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











