Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கலிகாலம்.. தபுக்கூட ரொமான்ஸ் பண்றது ரொம்ப ஈஸியா இருந்துச்சு.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
மும்பை: நடிகை தபுவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது எளிமையாக இருந்ததாக நடிகர் இஷான் கட்டர் தெரிவித்துள்ளார்.
தபு.. 48 வயதான ஒரு மூத்த நடிகை. ஆனாலும் கொஞ்சமும் முதிர்ச்சி தெரியாத நடிகையான அவர் பாலிவுட்டில் இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இதென்ன டகால்டி? ஒரே நாளில் சந்தானத்தின் 2 படங்கள் ரிலீஸா? அவசரமாக நடக்கிறது அதிரடி பஞ்சாயத்து

திரைத்துறைக்கு அறிமுகம்
தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 1980ஆம் ஆண்டு வெளியான பஸார் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் தபு.

தொலைக்காட்சி தொடர்
40 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார். இந்நிலையில் நடிகை தபு எ சூட்டபிள் பாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

வரும் ஜூன் முதல்
இந்த தொடரின் காட்சிகள் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது. இந்த சீரியல் வரும் ஜூன் மாதம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊஞ்சலில் ஒய்யாரம்
இந்த சீரியல் தொடர்பான காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஊஞ்சலில் நடிகை தபு தலையில் பூ வைத்தப்படி ஒய்யாரமாக படுத்திருக்க அவருடன் ரொமான்ஸ் செய்தபடி இருக்கிறார்.

தபுவுடன் ரொமான்ஸ்
இந்நிலையில் இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டர், தபுவுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தபுவுடன் ரொமான்ஸ் செய்வது ரொம்பவே ஈஸியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

காதலனாக விளையாடுவது
ஏனெனில் அந்த நபர் தபு என்பதால் அது உண்மையிலேயே உங்களுக்காக பாதி வேலையை செய்கிறது. இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், இதை நான் தடக்கிலும் சொல்லியிருக்கிறேன், அழகிய காதலனாக விளையாடுவது எனக்கு எப்போதும் எளிதானது.

சாய்தா பாய்
ஏனென்றால் அவர் மயக்குகிறார், அதுவும் குறிப்பாக இந்த கதாபாத்திரத்தில். மக்கள் சாய்தா பாயைப் பார்க்க இருப்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தபாஸ்கோ
தபுவுக்கு தபாஸ்கோ என்ற செல்லப்பெயரும் உண்டு. தபாஸ்கோ தபாஸம்க்காக.. நான் அதை கொண்டு வந்தேன்.. அவர் ஒரு மிர்ச்சி.. என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார் இஷான்.

என் இதயம்தான்..
மேலும் தபுவுக்கு என்ன கிஃப்ட் தர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, பட்டென என்னுடைய இதயம் என்று கூறினார். என்னுடைய இதயத்தைதான் தபுவுக்கு பரிசாக தர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் காலிபின் கவிதை புத்தகத்தை நான் அவருக்கு பரிசளிப்பேன், என்றும் அவர் கூறினார்.

பாதிக்கு பாதி
இஷான் கட்டர் நடிகை தபுவைவிட 24 வயது சிறியவர். தபுவுக்கு 48 வயதாகிறது. ஆனால் இஷான் கட்டருக்கு 24 வயதுதான் ஆகிறது. அவரது வயதில் பாதிக்கு பாதி. அதோடு இஷான், நடிகர் ஷாஹித் கபூரின் ஒன்று விட்ட தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.