மலையாளத்து ஸ்ருதி லட்சுமியுடன் பாரசீக மன்னன்!

By Sudha

சென்னை: வேலை, ஜூனியர் சீனியர், என்னவளே ஆகிய படங்களை இயக்கியவரான ஜே.சுரேஷ் தற்போது ஹீரோவாகி விட்டார். அவரே இயக்கி, நடித்துள்ள படம்தான் பாரசீக மன்னன். இதில் அவருக்கு ஜோடியாகியிருப்பவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள ஸ்ருதி லட்சுமி.

யார் இந்த ஸ்ருதி லட்சுமி?

யார் இந்த ஸ்ருதி லட்சுமி?

ஸ்ருதி லட்சுமி மலையாளத்தில் பல படங்களில் நடித்தவராம். தமிழுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறார்.

மம்முட்டியுடன் ஜோடி போட்டவர்

மம்முட்டியுடன் ஜோடி போட்டவர்

மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோருடன் ஜோடி போட்ட அனுபவமும் ஸ்ருதி லட்சுமிக்கு உண்டாம்.

சிம்பன்சியிடம் முத்தம் பெற்றவர்

சிம்பன்சியிடம் முத்தம் பெற்றவர்

பாரசீக மன்னன் படத்தில் ஸ்ருதி லட்சுமிக்கு ஜே.சுரேஷ் மட்டுமல்லாமல், சிம்பன்சிகளும் கூட முத்தமிட்டு கொஞ்சி விளையாடியுள்ளனவாம். இந்தக் காட்சிகளில் நடித்தபோது சற்றும் பயமின்றி கலக்கி விட்டாராம் ஸ்ருதி லட்சுமி.

அது என்ன பாரசீக மன்னன்?

அது என்ன பாரசீக மன்னன்?

கதைப்படி ஹீரோ சுரேஷ் வளைகுடா நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவராக வருகிறாராம். அவரை நண்பர்கள் பாரசீக மன்னன் என்று அழைப்பார்களாம். எனவே அதையே படத் தலைப்பாக்கி விட்டார்களாம்.

யுவனுக்கு புதுப் பட்டம்

யுவனுக்கு புதுப் பட்டம்

இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை ஆலோசனை என்ற பொறுப்பை ஏற்றுள்ளாராம். மேலும் அவருக்கு இளைய இசைஞானி என்ற புதிய பட்டத்தையும் கொடுத்துள்ளாராம் சுரேஷ். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். படத்தின் ஆடியோ சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.

ஸ்ருதிக்கு கிராக்கி வருமா?

ஸ்ருதிக்கு கிராக்கி வருமா?

இப்படத்தின் மூலம் தமிழுக்கு வரும் இன்னும் ஒரு மலையாளத்து நடிகையாக ஸ்ருதி மாறியுள்ளார். இவரும் பிற மலையாள நடிகைகளைப் போல பெரிய ரவுண்டு வருவாரா, கிராக்கி கிடைக்குமா என்பதை படத்தைப் பார்த்த பின்னர் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X