சேலையில் செம்ம ஹாட்டாக வந்த சமந்தா.. வைரலாகும் ஜானு டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி புகைப்படங்கள்!
Recommended Video
சென்னை: 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தின் டிரைலர் ரிலீஸ் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சேலையில் செம்ம ஹாட்டாக வந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ள ஜானு படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

96 ரீமேக்
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. முதல் காதல், பள்ளி ரீ-யூனியன் என பல விசயங்களை அழகாக வைத்து எடுக்கப்பட்ட 96 படத்தை தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

அதே இயக்குநர்
தமிழில் 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் தான் தெலுங்கில் உருவாகியுள்ள ஜானு படத்தையும் இயக்கியுள்ளார். 96 படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் தில் ராஜூ, பிரேம் குமார் இயக்கினால் தான் இந்த படம் சிறப்பாக இருக்கும் என கருதி அவரையே இயக்க வைத்துள்ளார்.
ஜானுவாக சமந்தா
தமிழில் ஜானுவாக த்ரிஷா நடித்து அசத்தியிருந்த வேடத்தில் தெலுங்கில் சமந்தா நடித்துள்ளார். ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா தமிழில் நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜானு டிரைலரில் வெள்ளை நிற சுடிதாரில் சமந்தா ஜானுவாக கச்சிதமாக இருக்கிறார்.
சேலையில் ஹாட்
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாகவுள்ள ஜானு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பழுப்பு நிற சேலையில் செம்ம செக்ஸியாக சமந்தா வந்திருந்தார். அவரது ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

யாரு பெஸ்ட்
ஜானுவாக த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளாரா அல்லது சமந்தா சிறப்பாக நடித்துள்ளாரா என்ற விவாதம் தமிழ் ரசிகர்கள் மற்றும் டோலிவுட் ரசிகர்களிடையே வலுத்து வருகிறது. இரண்டு படங்களையும் பிரேம் குமாரே இயக்கியுள்ளதால், இருவரது நடிப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்திருக்காது என்றே பெரும்பாலான ரசிகர்களால் கருதப்படுகிறது.

பிளாக்பஸ்டர் ஹிட்
தொடர்ந்து டோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் நடிகை சமந்தா, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜானு படத்தின் மூலம் தனது பிளாக்பஸ்டர் கணக்கை டோலிவுட்டில் தொடங்க உள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான மஜ்லி மற்றும் ஓ பேபி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











