நீச்சல் குளத்துல நிர்வாண மனநிலையாம்ல... என்னா டாட்டூ... வைரலாகிறது வில்லன் மகளின் பிகினி போட்டோ
சென்னை: பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப் மகளின், பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகர் ஷாக்கி ஷெராஃப். இவர் தமிழில், ஆரண்ய காண்டம் படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது.
இதையடுத்து ரஜினியின் கோச்சடையான், முப்பரிமாணம், மாயவன், விஜய்யின் பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

டைகர் ஷெராப்
அடுத்து சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வர இருக்கிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். மகன் டைகர் ஷெராப், இந்தி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கிருஷ்ணா
இவர் மகள் கிருஷ்ணா. இவர் இன்ஸ்டாகிராமில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு அப்போது பரபரப்பு கிளப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது காதலர் இபான் ஹியாம்ஸுடன் (Eban Hyams) பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
நீச்சல் குளம்
இந்தப் புகைப்படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து இன்றும் அட்டகாசமான ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், நீச்சல் குளத்தின் அருகில் அவர் படுத்து இருக்கிறார்.

நிர்வாண மனநிலை
உடல் முழுவதும் அவர் குத்தியுள்ள அழகான டாட்டூ படங்கள் அதில் தெரிகிறது. இதற்கு நிர்வாண மனநிலை என்று அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











