twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா லாக்டவுனில்.. மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்த பிரபல நடிகை!

    By
    |

    மும்பை: இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளார்.

    இலங்கையை சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

    பிறகு தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்‌ஷய்குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    சன்டேன்னாலே சரக்குதானா.. குடியும் கும்மாளமுமாய் இருக்கும் நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!சன்டேன்னாலே சரக்குதானா.. குடியும் கும்மாளமுமாய் இருக்கும் நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!

    சல்மான் கானின் பண்ணை

    சல்மான் கானின் பண்ணை

    பிரபாஸ் நடித்து தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அடுத்து அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக, இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்த லாக்டவுன் நேரத்தில் அவர் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து போட்டோ ஷூட்களையும் அவர் நடத்தி இருந்தார்.

    கிராமங்களை தத்தெடுத்தார்

    கிராமங்களை தத்தெடுத்தார்

    இந்நிலையில் அவர் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பதடி, சாகுர் ஆகிய கிராமங்களை மூன்று வருடத்துக்குத் தத்தெடுத்துள்ள அவர், ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு வழங்க இருக்கிறார். இந்த கிராமங்களில் மொத்தம் 1550 பேர் உள்ளனர். இவர்களுக்கான உணவுகளை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஸ்பான்சர் செய்ய இருக்கிறார்.

    இக்கட்டான காலகட்டம்

    இக்கட்டான காலகட்டம்

    இதுபற்றி நடிகை ஜாக்குலின் கூறும்போது, இது இக்கட்டான காலகட்டம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களில் சிலர் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் சமூகத்தில் பலர் இந்த கொரோனா லாக்டவுன் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளுக்குக் கூட போராடி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை.

    ஊட்டச்சத்து குறைபாடு

    ஊட்டச்சத்து குறைபாடு

    நான் தத்தெடுத்துள்ள கிராமங்களில், புதிதாக பிறக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள, 150 பெண்களுக்கு தகவல்கள் மற்றும் உதவிகளை செய்ய இருக்கிறோம். இதில் ஏழு பேருக்கு பயிற்சியும் வேலை வாய்ப்பும் வழங்க இருக்கிறோம். 20 குடும்பங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உள்ளோம். சமூகத்துக்கு திருப்பி அளிப்பது குறித்து என் பெற்றோர் அடிக்கடி சொல்வார்கள். அதை நான் செய்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Jacqueline Fernandez has adopted two villages in Maharashtra
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X