46 மில்லியனாம்.. அதுக்கு இப்படியா? பூக்களால் மறைத்து.. வைரலாகும் பிரபல நடிகையின் டாப்லெஸ் போட்டோஸ்

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள டாப்லெஸ் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு புகைப்படங்களைப் பதிவிடுவதை தொழிலாக வைத்துள்ளனர், பல ஹீரோயின்கள்.

சின்ன நடிகைகளில் இருந்து டாப் ஹீரோயின்கள் வரை இதை செய்து வருகின்றனர்.

ஸ்மைல் குயின்

ஸ்மைல் குயின்

அவர்களுடைய புகைப்படங்களை ரசிகர்கள் கண்டபடி வைரலாக்கி வருகின்றனர். அதோடு அவர்களை பின் தொடர்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். பிரபல இந்தி ஹீரோயின் ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவரை பாலிவுட்டின் ஸ்மைல் குயின் என்கிறார்கள் இலங்கையை சேர்ந்தவர்.

தனக்கென ஓர் இடம்

தனக்கென ஓர் இடம்

அமிதாப் பச்சன், சஞ்சய் தத் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜாக்கிலின், தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.தனக்கென ஓர் இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கிறார்.

பண்ணை வீட்டில்

பண்ணை வீட்டில்

பிரபாஸ் நடித்து தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அடுத்து, அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக, இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

தத்தெடுப்பு

தத்தெடுப்பு

அங்கிருந்து போட்டோ ஷூட்களையும் அவர் நடத்தி இருந்தார். இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் இரண்டு கிராமங்களை மூன்று வருடத்துக்குத் தத்தெடுத்துள்ள அவர், அந்த கிராமத்தினருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க இருக்கிறார். இதுபற்றி அவர் அறிவித்திருந்தார்.

46 மில்லியன்

46 மில்லியன்

இந்நிலையில் நடிகை ஜாக்குலினின் இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 46 மில்லியனை தாண்டி இருக்கிறது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள நடிகை ஜாக்குலின், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கூடவே சில டாப்லெஸ் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

பூக்களால் மறைத்து

பூக்களால் மறைத்து

அதாவது தனது உடலை பூக்களால் மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் கமென்ட்களை அள்ளிக் குவித்துள்ளனர். 46 மில்லியனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பலர், 50 மில்லியனை தொட வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஆஹா, ஓஹோ

ஆஹா, ஓஹோ

46 மில்லியன் பாலோயர்களின் குயின் என்று சிலர் கூறியுள்ளனர். சில நெட்டிசன்ஸ், அவர் பியூட்டியை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். பெண்களே உங்கள் அழகில் மயங்குவார்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர்.

பாடாய்ப்படுத்தும் ஸ்டில்ஸ்

பாடாய்ப்படுத்தும் ஸ்டில்ஸ்

சில நெட்டிசன்ஸ், பசங்களை பாடாய்ப்படுத்தும் புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டு இருக்கீங்க என்று செல்லமாகக் கோபப்பட்டுள்ளனர். 46 மில்லியனுக்காக இப்படியொரு கிளாமர் ஸ்டில்லா? என்று சிலர் கேட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X