இன்னாம்மா வளையிறாரு.. வெறித்தனமா வொர்க்கவுட்.. வைரலாகும் பாலிவுட் நடிகை வீடியோ!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் பிறந்து வளர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Recommended Video
யோகா, வொர்க்கவுட் என உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் நடிகைகளில், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வேற லெவலில் வொர்க்கவுட்களை செய்து வருகிறார்.
View this post on InstagramA post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on
வெறித்தனமான வொர்க்கவுட்
கைகளை தரையில் ஊன்றி, கால்களை மேலே தூக்கி, இரண்டு கால்களையும் பட்டாம்பூச்சி போல முழுவதுமாக இஷ்டத்துக்கு வளைத்து வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். தினமும் இன்வெர்ஷன் வொர்க்கவுட்களை செய்வதில் வாடிக்கையாக கொண்டவர் ஜாக்குலின்.

ஒரு மணி நேரத்தில்
வில்லாக வளைந்து வொர்க்கவுட் செய்யும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் வீடியோவை பார்த்து, பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாயை பிளந்து லைக் போட்டு வருகின்றனர். இந்த வீடியோவை வெளியிட்டு ஒரு மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அள்ளி உள்ளார்.

நெட்பிளிக்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மூலம் வரும் மே 1ம் தேதி முதல் ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளார் ஜாக்குலின். மிஸ்ட்ரஸ் சீரியல் கில்லர் எனும் அந்த வெப்சீரிஸில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் லீடு ரோலில் மிரட்டி உள்ள டீசரை நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் ஜாக்குலின்.
பிக்பாஸ் நடிகருடன்
கடந்த மார்ச் 8ம் தேதி ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் பிரபலம் அசிம் ரியாஸ் உடன் இணைந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடனமாடிய வீடியோ பாடல் 50 மில்லியன் வியூக்களை கடந்து யூடியூபில் வைரலானது. அடுத்ததாக ஜாக்குலினின் நெட்பிளிக்ஸ் தொடருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கத்தியை காட்டி
சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் வீடியோ கால் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி இருந்தார் ஜாக்குலின். மிஸ்ட்ரஸ் சீரியல் கில்லர் தொடரின் ப்ரீமியர் ஷோவுக்கு என்ன டிரெஸ் போட்டு தயாராகலாம் என கேட்க, எந்த ப்ரீமியர் என மனோஜ் பாஜ்பாய் கலாய்க்க, உடனே கத்தி எடுத்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











