அப்பா மரணம்.. அம்மாவின் மறுமணம்.. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..ஜெய் பீம் நடிகை வாழ்க்கையில் இப்படியா?

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த லிஜோமோல் ஜோஜ் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதன் காரணமாக தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இதனையடுத்து தமிழில் அவர் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாக; தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

லிஜோமோல் ஜோஸ் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சூப்பர் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகு, அதீத திறமை என கலக்கும் அவருக்கென்று கேரளா, தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். நடிப்பு அரக்கன் என்று புகழப்படும் ஃபகத் பாசிலுடன்தான் தனது முதல் படத்தை நடித்தார் லிஜோமோல். அந்தப் படத்திலேயே அசால்ட்டாக தனது நடிப்பில் ஸ்கோர் செய்துவிட்டார். இதன் காரணமாக மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

தமிழில் அறிமுகம்: மலையாளத்தில் பிஸியாக இருந்த அவர் தமிழில் சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். அதில் எமோஷனல், காதல், கோபம் என அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிக்காட்டி நடிப்பில் பின்னியிருந்தார். இதன் காரணமாக மலையாளத்தில் எப்படி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தாரோ அதேபோல் கோலிவுட்டிலும் ஈர்த்துவிட்டார். தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம் என மாறி மாறி பிஸியாக நடித்துவருகிறார்.

Jai Bhim Heroine Lijomol Jose said she could not accept his mother s second marriage

ஜெய் பீம்: தமிழில் லிஜோமோலை பொறுத்தவரை ஜெய் பீம் திரைப்படம் மிக மிக முக்கியமான திரைப்படம். அப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். எனவே அதில் நடிப்பதற்கு அவ்வளவு உழைப்பை போட வேண்டும். செங்கேணி என்ற கதாபாத்திரத்தை ஏற்று லிஜோமோல் அதனை அசால்ட்டாக செய்தார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடைசியாக அவர் சமீபத்தில் தமிழில் வெளியான ஜென்ட்டில் வுமன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் மலையாளத்தில் பொன்மேன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லிஜோமோலின் பேட்டி: இந்நிலையில் லிஜோமோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "எனக்கு ஒன்றரை வயது இருக்கும்போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அப்பா இறந்த சமயத்தில் என்னுடைய அம்மாவுக்கு இள வயதுதான் ஆனது. திடீரென அவர் மறுமணம் செய்துகொண்டார். அந்த மறுமணம் எனக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது.

சோகமாக இருந்தது: தந்தையை இழந்துவிட்டேன். தாயின் புதிய வாழ்க்கையை ஏற்க முடியாமல் எனது மனநிலை ரொம்பவே சோகமாக இருந்தது. தாயின் அடுத்தக்கட்ட வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் மனதில் குழப்பம், நம்பிக்கையின்மை போன்றவை அதிகளவு வளர தொஅங்கின. அவர் மறுமணம் செய்த பிறகு புதிதாக வந்த ஒருவரை என்னுடைய தந்தையாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தூக்கமே வராது. அத்தை வீட்டில்தான் பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருந்தேன். அம்மாவின் அருகில் தூங்கியதே இல்லை.

Take a Poll

அம்மாவை விட்டுவிட்டேன்: மனதில் நிம்மதியே இருக்காது. அந்தக் காலகட்டத்தில் நான் எனது அம்மா மீது உச்சக்கட்ட கோபத்தில் இருந்தேன். சிறிது காலம் சென்ற பிறகுதான் நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அம்மாவும் அவருடைய கணவரும் எனக்காக குழந்தை பெற்றுக்கொள்ளவே இல்லை. என்னை மட்டும்தான் வளர்த்தார்கள். அது பெரிய தியாகம். என் அம்மாவின் கணவர் வந்த பிறகு எங்கள் வாழ்க்கை நல்லபடியாக மாறியது. அவரது அன்பும், பொறுமையும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இப்போது அவர்கள் இரண்டு பேரும் எனக்காக மட்டும் வாழ்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X