ஜெய் உடன் காதலெல்லாம் இல்லை… நட்பு மட்டும்தான்… நஸ்ரியா
நடிகர் ஜெய் எனக்கு நல்ல ஃப்ரெண்டுதான். அவருடன் காதலெல்லாம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா.
'நேரம்' படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். அந்த படத்திற்குப் பின்னர் தனுஷ், ஆர்யா, கார்த்தி என தமிழின் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.
ஆனாலும் நடிகர் ஜெய் உடன் இரண்டு படங்களில் நடித்த நஸ்ரியாவைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றனர். ஜெய் சொல்வதைத்தான் நஸ்ரியா கேட்கிறார். காதல் காட்சிகளில் பிற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பதில்லை என்றும் கிசுகிசு வெளியானது. அதனை தற்போது மறுத்துள்ளார் நஸ்ரியா.

நல்ல ஃப்ரெண்ட்
'ஜெய் எனக்கு நல்ல ப்ரெண்ட், அவ்வளவு தான். அவருடன் ஷூட்டிங் நடக்கும்போது மட்டுமே பேசுவேன். எங்காவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் பேசுவோம்.

காதல் இல்லை
ஊடகங்களில் வெளியாவது போல எனக்கும், ஜெய்க்கும் இடையில் காதல் எதுவும் கிடையாது' என்றும் கூறியிருக்கிறார் நஸ்ரியா.

ஜெய் உடன் நஸ்ரியா
ஜெய்யுடன், 'திருமணம் எனும் நிக்கா', 'ராஜா ராணி' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் நஸ்ரியா. இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நய்யாண்டியில்
'நய்யாண்டி' படத்தில் தனுஷ் உடன் நடிக்கிறார் நஸ்ரியா. அந்த படப்பிடிப்பு தளத்துக்கே சென்று நஸ்ரியாவுடன் ஜெய் பேசிக்கொண்டிருப்பதாகவும், இதனால் ஷூட்டிங் பாதிக்கப்படுவதாகவும் கூட செய்திகள் வெளியாகின.

மறுக்கலையே
இதுகுறித்து ஜெய் எதுவுமே சொல்லவில்லை. நஸ்ரியாவும் மவுனம் காத்துவந்த நிலையில் முதல்முறையாக கிசுகிசு செய்திகளை மறுத்துள்ளார் நஸ்ரியா.


Click it and Unblock the Notifications











