இவங்கள பார்த்தா ஜோதிகா மாதிரியே இருக்காங்கல்ல...!
சென்னை: அர்ஜூன் இயக்கி நாயகனாக நடித்து வரும் ஜெய்ஹிந்த் 2 படத்தின் நாயகி சுர்வீன்சாவ்லா பார்க்க அப்படியே ஜோதிகா மாதிரியே இருக்கிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்ப்பவர்கள் அப்படியே ஜோதிகா மாதிரியே இருக்கீங்களே என்று ஆச்சரியத்துடன் சொல்லி வருகிறார்களாம்.
பார்க்க ஜோதிகாவின் ஜெராக்ஸ் போலவே காணப்படும் சுர்வீன் சாவ்லாவுக்கும் கூட தனது தோற்றம் குறித்து சந்தோஷம்தானாம்...

அர்ஜூன் தயாரித்து, இயக்கி, நடித்து
ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் படம்தான் ஜெய்ஹிந்த்2. இதில் சுர்வீன் சாவ்லாதான் அவருக்கு ஜோடி.

பிரமாண்டச் செலவுடன்
படத்தை பிரமாண்டச் செலவுடன் தயாரித்து வருகிறார் அர்ஜூன். மைசூரில் 2 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 லட்சம் செலவில் பிரமாண்ட சிறைச்சாலை செட் போட்டு படமாக்கியுள்ளனராம். அதில் சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

குழந்தைகள் நாட்டின் பொக்கிஷம்
படத்தின் கதை குறித்து அர்ஜூன் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொத்தாக மட்டுமே நினைகிறார்கள். குழந்தைகள் பெத்தவங்களோட சொத்து மட்டுமல்ல, இந்த நாட்டின் பொக்கிஷம்.அப்படிப்பட்ட பொக்கிஷத்தை எப்படி உருவாக்கி கொண்டிருக்கிறோம் அதைத்தான் கதை கருவாக கையாண்டிருக்கிறேன் என்றார்.

சூப்பர் சுர்வீன்
படத்தின் நாயகி சுர்வீன் சாவ்லாதான் படப்பிடிப்புத் தளத்தில் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறார். காரணம் ஜோதிகாவின் சாயலில் இருப்பதால்.
அப்படியே ஜோதிகா மாதிரி நன்றாகவும் நடியுங்கள் சுர்வீன்...!


Click it and Unblock the Notifications











