ப்பா.. தம்பி சட்டை.. தொடை தெரிய கிழிஞ்ச பேன்ட்.. அலப்பறை கிளப்பும் ஜெயிலர் மருமகள்!

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாகவும் வசந்த் ரவியின் மனைவியாகவும் ரித்து ராக்ஸின் அம்மாவுமாகவும் நடித்தவர் தான் மலையாள நடிகை மிர்னா. கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்ணா மேனன் என மாற்றிக் கொண்டு நடித்து வருகிறார். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல் ஜோடியாக பர்த் மார்க் படத்தில் நடித்துள்ளார். அடுத்த வாரம் அந்த படம் வெளியாகிறது.

Jailer actress Mirna Menon ripped jeans latest photos stuns fans

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தம்பியின் சட்டையை அணிந்துக் கொண்டு கிழிந்த ஜீன்ஸ் உடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறது.

ரஜினியின் ரீல் மருமகள்: மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடித்த மிர்ணா மேனனுக்கு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் உடன் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வசந்த் ரவியின் மனைவியாகவும் முத்துவேல் பாண்டியனின் மருமகளாகவும் நடித்திருப்பார்.

பர்த் மார்க்: அடுத்து ஷபீர் கல்லரக்கல் நடிப்பில் உருவாகி உள்ள பர்த் மார்க் படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஷபீர் கல்லரக்கல் தான் வில்லனாகவே டிரெய்லரில் மிரட்டுகிறார். கர்ப்பவதியான தனது மனைவியை அவர் ஏன் டார்ச்சர் செய்கிறார். அவரிடமிருந்து மிர்னா தப்பித்து விடுவாரா? என்கிற பதட்டம் டிரெய்லரை பார்த்ததுமே வருகிறது. வரும் பிப்ரவரி 23ம் தேதி அந்த படம் வெளியாகிறது.

பிரதர் ஷர்ட்: தனது சகோதரனின் சட்டையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறேன் என போட்டோக்களை வெளியிட்டு கேப்ஷன் போட்டுள்ளார் மிர்னா. பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர், அடுத்ததாக பர்த் மார்க் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்ட காத்திருக்கிறார்.

தொடை தெரிய கிழிந்த ஜீன்ஸ்: ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் சன்டே ஸ்பெஷலாக தனது இன்ஸ்டாகிராமில் தொடை தெரிய கிழிந்த ஜீன்ஸ் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X