விட்டா ஜெயிலர் மருமகள் சிக்ஸ்பேக் வச்சிடுவாரு போல.. எல்லா ஆங்கிள்லயும் சும்மா ஃபயரா இருக்காரே!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை மிர்னா மேனன். பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானவர் தான் இவர். அந்த பெயர் அவருக்கு வெற்றிப் படங்களை கொடுக்காத நிலையில், மிர்னா மேனனாக மாறினார்.
பெயர் மாற்றம் அவருக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது என ரொம்பவே ஸ்ட்ராங்காக நம்புகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல் ஜோடியாக பர்த் மார்க் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக 1.3 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றிய இவர், அடுத்த படத்துக்காக ஸ்டன்ட் பயிற்சிகளையும் ஜிம்மில் கடினமாக வொர்க்கவுட்டும் செய்து வருகிறார்.
ஜெயிலர் மருமகள்: என்னோட மருமகள் பத்தி ஏதோ சொன்னியாமே என ரஜினிகாந்த் ரவுடிகளை வெட்டி வீசும் காட்சியில் தான் ஜெயிலர் படமே சூடு பிடிக்கும். அந்த அளவுக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கும். ஜெயிலர் 2 படத்தில் தனது கணவரை மாமனாரே கொன்று விட்டார் என்பதை அறிந்து இவர் ஏதாவது செய்வாரா? என்கிற அளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடித்த மிர்னா மேனன். தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
பர்த் மார்க்: ஷபீர் கல்லரக்கல், மிர்னா மேனன் நடிப்பில் வெளியான பர்த் மார்க் படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். பிப்ரவரி 23ம் தேதி வெளியான படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், வசூலில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அந்த படம் போகவில்லை.
ஓவர் வொர்க்கவுட்: மலையாள நடிகை மிர்னா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கம் கிளாமர் போட்டோக்களை போட்டு இளைஞர்களை இம்சை செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் சிக்ஸ் பேக்கே வைத்து விடுவார் போல அந்தளவுக்கு இடுப்பு பகுதியை சும்மா கல் மாதிரி மாற்ற வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வருகிறார். லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோவை பார்த்து ஏகப்பட்ட இளைஞர்களுக்கே மூச்சு வாங்கி வியர்த்து போய் விட்டது.


Click it and Unblock the Notifications











