தாஜ்மகாலில் ஜனநாயகன் பட நடிகை.. கணவர் கொடுத்த முத்தத்தை பார்த்தீங்களா.. நிஜமாவே குட் ஒயிஃப் தான்!

சென்னை: எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ஜன நாயகன் திரைப்படம். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணியும் நடித்துள்ளார். அவர் தனது கணவருடன் தாஜ்மகால் சென்று எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரியாமணி. சமீபத்தில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் அவர் நடிப்பில் வெளியான Good Wife வெப்சீரிஸ் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. நடிகை ரேவதி தான் அந்த வெப்சீரிஸை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Jana Nayagan actress Priyamani spends lovable time at Taj Mahal with her husband
Photo Credit:

ஜனநாயகன் செட்டில் தன்னை முத்தழகு என்று விஜய் அழைத்தார் என்று சமீபத்தில், அளித்த பேட்டியில் செம க்யூட்டாக சொன்ன பிரியாமணி தற்போது தாஜ்மகாலில் கணவருடன் ரொமாண்டிக் டூர் அடித்துள்ளார்.

தாஜ்மகாலில் பிரியாமணி: கண்களால் கைது செய், பருத்தி வீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரியாமணி நீண்ட வருடங்கள் கழித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்தார். ஃபேமிலிமேன் வெப்சீரிஸில் மனோஜ் பாஜ்பாய் மனைவியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த அவர், சமீபத்தில் குட் ஒயிஃப் வெப்சீரிஸிலும் வழக்கறிஞராக நடித்து ஸ்கோர் செய்தார். தனது கணவர் முஸ்தபா ராஜ் உடன் இணைந்து தாஜ்மகாலுக்கு சென்ற பிரியாமணி அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Jana Nayagan actress Priyamani spends lovable time at Taj Mahal with her husband
Photo Credit:

முத்தம் கொடுத்த கணவன்: டிராகன் படத்தில் பாரீஸ் டவரை பார்த்துக் கொண்டு கயாடு லோஹருக்கு பிரதீப் ரங்கநாதன் லிப் கிஸ் அடித்ததை போல காதல் சின்னமான தாஜ்மகாலுக்கு சென்ற நிலையில், நடிகை பிரியாமணிக்கு முஸ்தபா ராஜ் நெற்றியில் முத்தம் கொடுத்த செம ரொமான்ட்டிகான போட்டோவையும் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

ஜன நாயகனுக்கு வெயிட்டிங்: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆஃபிசர் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்த பிரியாமணி அடுத்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள நிலையில், அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், ஜிடிஎன் என்கிற படத்திலும் நடித்து வரும் இவர் ஓடிடி வெப்சீரிஸ்களிலும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். 41 வயதிலும் காதல் கணவருடன் நல்லா ரொமான்ஸ் பண்றீங்க என முத்தழகை பலரும் கண் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X