Jana Nayagan: நண்பனின் கடைசி படம்.. FDFS பார்த்த த்ரிஷா.. விசில் அடிச்சு கொண்டாடியிருப்பாங்களே!
சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. அரசியலுக்கு முழுமையாக வந்த பிறகு விஜய் நடித்த கடைசி படம் என்பதால், ரசிகர்களுக்கு இது ஒரு சாதாரண ரிலீஸ் அல்ல... எமோஷனல் கொண்டாட்டமாகவே மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாடுகள் என எங்கு பார்த்தாலும் அதிகாலை காட்சிகளுக்கே ரசிகர்கள் திருவிழா போல திரண்டனர்.
அதேபோல், சென்னை ரோஹிணி திரையரங்கிலும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்துக்கு மத்தியில் அமைதியாக வந்து ஜனநாயகன் படத்தை பார்த்தவர் நடிகை த்ரிஷா. விஜய்யுடன் நீண்டகால நட்பை பகிர்ந்து வரும் த்ரிஷா, முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தை பார்த்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் - த்ரிஷா கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் தனி எதிர்பார்ப்பு இருக்கும். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என பல படங்களில் இணைந்து நடித்த இருவரும், திரைக்கு வெளியேயும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதனால்தான், விஜய்யின் கடைசி திரைப்படத்தை தவறவிடாமல் FDFS-லேயே த்ரிஷா பார்த்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ரோஹிணி தியேட்டரில் த்ரிஷாவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். "நண்பனின் கடைசி படத்தை முதல் நாளே வந்து பார்த்துட்டாங்க", "இதுதான் உண்மையான சப்போர்ட்", "தியேட்டரே வேற லெவல் வைப்ஸ்ல இருந்திருக்கும்" என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், விஜயின் 69-வது மற்றும் கடைசி திரைப்படம் என்பதால் வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதிலும் குறிப்பாக, படத்தில் முன் இடம்பெறும் "தளபதி கச்சேரி" பாடலின் One Last Dance பகுதி ரசிகர்களை கண்கலங்க வைத்திருப்பதாக முதல் காட்சி பார்த்த ரசிகர்களே கூறி வருகின்றனர். விஜய்யின் பழைய ஹிட் பாடல்களின் இசையில் அவர் ஆடிய அந்த சிறப்பு டான்ஸ், தியேட்டர்களில் விசில் சத்தத்தை மட்டுமல்ல... பல ரசிகர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது.

அரசியல் வாழ்க்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தளபதி விஜய்யை இனி திரையில் இதுபோல் பார்க்க முடியாது என்ற உணர்வுடன் ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை கொண்டாடி வரும் நிலையில், த்ரிஷாவும் முதல் நாள் முதல் காட்சியிலேயே திரையரங்கிற்கு வந்து படம் பார்த்திருப்பது, இந்த ரிலீஸுக்கு மேலும் ஒரு கவனத்தை சேர்த்துள்ளது. "நண்பனின் கடைசி படத்தை நண்பியே வந்து கொண்டாடிட்டாங்க" என்பதுதான் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வரும் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications