கணவருடன் ஹனிமூன் சென்ற ஜனனி.. கடற்கரையில் ஒய்யாரமாய் இருக்கும் ஜோடி.. கண்ணு பட போகுது
சென்னை: அவன் இவன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஜனனி. தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சொல்லிக்கொள்ளுபடியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதுவும் பெரிய பிரேக்கை கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் தனது காதலர் விமானி சாய் ரோஷன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவருடன் அவர் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் சின்ன வேடத்தை ஏற்ற ஜனனி; பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அவர் செய்திருந்த பேபி கதாபாத்திரம் இன்னமும் சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பாலாவின் இயக்கம் என்பதால் பெரிய நம்பிக்கை இருந்தது அந்தப் படத்தின் மீது. இருப்பினும் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதேசமயம் ஜனனியின் ரோல் கவனிக்கப்பட்டதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

பிஸி நடிகை: அதன்படி தெகிடி, பாகன், தர்ம பிரபு, அதே கண்கள், பலூன், இப்படிக்கு காதல், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் தெகிடி மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மற்ற படங்கள் எல்லாம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. தமிழ் போன்றே மலையாளத்திலும், 3 டாட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்களும் பெரிய அளவிலான திருப்புமுனையை ஜனனிக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது தனக்கான இடத்தை பிடித்துவிட வேண்டும் என முனைப்பில் இருந்தார் அவர்.
பிக்பாஸில் ஜனனி: ஆனால் திரைத்துறை அவ்வளவு நல்ல விஷயங்களை அவருக்கு கொடுக்கவில்லை. அதனையடுத்து தனது ரூட்டை மாற்றிய அவர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். அதில் அவர் மூன்றாவது ரன்னர் அப்பாக வந்தார். டைட்டில் வெல்ல முடியாவிட்டாலும் ரன்னர் அப்பாக வந்ததே அவருக்கு திருப்திதான். எப்படியும் பிக்பாஸ் முடிந்து தனக்கு புதிய கதவுகள் திரைத்துறையில் திறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அப்படி எதுவும் வெற்றியோ வேறு எதுவுமோ கிடைக்கவில்லை.
திருமணம் செய்துகொண்ட ஜனனி: இதற்கிடையே அவர் விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்துவந்தார். அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வாரத்தில் திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். திருமணத்துக்கு பின்பு ஜனனி நடிப்பாரா என்பது சந்தேகமே. ஏற்கனவே மார்க்கெட்டும் காலியாகிவிட்டதன் காரணமாக; டீசன்ட்டாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் தனது கணவர் சாயுடன் மாலத்தீவுகளுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார் ஜனனி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். சூரியன் சாய்வது போல் எனது மனம் உன்னிடம் சாய்கிறது. நாங்கள் இங்கு வந்த நிமிடத்திலிருந்து எல்லாமே எளிதாக இருக்கின்றன. தெளிந்த நீல நீர், கடல் மேல் அமைந்திருக்கும் வில்லாக்கள், உண்மையிலேயே அஸ்தமனங்கள் கனவு போல் இருந்தன. அனைத்தையும் நாங்கள் மெதுவாக ரசித்து அனுபவித்து ஒருவருடன் ஒருவர் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பதுதான் எங்களது ஒரே வேலை" என்று காதலோடு கேப்ஷன் போட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இப்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. மேலும் ஊருக்கு வந்ததும் சுத்திப்போடுங்க கண்ணு பட்டுடப்போகுது என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















