அஜீத்தா, விஜய்யான்னா அஜீத் தான்: ஜனனி அய்யர்
சென்னை: அஜீத் அல்லது விஜய் படத்தில் நடிக்க கேட்டால் தான் நிச்சயம் அஜீத்துடன் தான் நடிப்பேன் என்று ஜனனி அய்யர் தெரிவித்துள்ளார்.
அவன் இவன், பாகன் ஆகிய படங்களில் நடித்த ஜனனி அய்யர் தற்போது மலையாளத்தில் பிசியான நடிகை. அவர் கையில் 4 மலையாள படங்கள் உள்ளன.
வாய்ப்பு வருவதால் அங்கு நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெகிடி
ஜனனி அய்யர் நடிப்பில் அண்மையில் வெளியான த்ரில்லர் படமான தெகிடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

கமல்
ஜனனிக்கு கோலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் மிகவும் பிடிக்குமாம். அவரை அடுத்து ஜனனிக்கு அஜீத் குமாரை தான் பிடிக்குமாம்.

அஜீத், விஜய்
அஜீத் மற்றும் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அவர்கள் இருவருடன் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது. 2 பேருடனும் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அஜீத் ரசிகை என்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பையே ஏற்றுக் கொள்வேன் என்றார்.

காதல்
ஜனனிக்கும், அதர்வாவுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளைப் பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைந்தார். தற்போது அதர்வாவின் பெயர் வேறு ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











