கம்பளிப்பூச்சிக்கு தங்கச்சியாக மாறிய ஜனனி.. கண்ணு செம்ம.. போங்க.. கொஞ்சும் ரசிகர்கள்!
சென்னை : தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பக்குவமாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகை தான் ஜனனி ஐயர் .
அடக்க ஒடுக்கமாக நடிக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவர்.அதனாலேயே இவருக்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடையிலும் நல்ல பெயர் உண்டு.
தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ தாறுமாறாக இருக்கின்றது.மேலும் ரசிகர்களால் பாராட்டுக்களும் பெற்றுள்ளார் .

பக்கத்துவீட்டுப்பெண்
பார்ப்பதற்கு வசீகரத்துடன் பக்கத்துக்கு வீட்டுப்பெண் போல் இருக்கும் ஜனனி ஐயர் ,தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை சேர்த்து வைத்துள்ளார் .அவருடைய எதார்த்தமான அடக்கமான நடிப்பு தான் அதற்கு முக்கியமான காரணம் என்றும் சொல்லலாம்.

3 டாட்ஸ்
தமிழில் திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்.சில வருடங்கள் தனக்கென இடத்தை பிடிக்க போராடினார் என்று தான் சொல்லவேண்டும் .அவரது நடிப்புக்கு தீனிபோட்ட படம் தான் இயக்குனர் பாலாவின் அவன் இவன் ,அந்த படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.மேலும் மலையாளத்தில் 3 டாட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பக்குவமான பதிவுகள்
எப்போதும் இணையத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜனனி,எப்போதும் அழகான ,பக்குவமான புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வருவார் .அதே போல் சமீபத்தில் அவர் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.அந்த விடீயோவைப்பார்த்த அவரது ரசிகர்கள் வர்ணித்தும் வருகின்றனர் .

பாடகி தீ
தற்போது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி கொண்டு இருக்கும் என்ஜாய் எஞ்சாமி என்கின்ற ஆல்பம் பாடல் பரபரப்பின் உச்சம் .இப்பாடலுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.நாட்டுப்புற ஸ்டைலும் ,பளிச்சென்று வெளியே விழும் பாடகி தீயின் தமிழ் உச்சரிப்பும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.ஏற்கனவே சூரரை போற்று பாடலின் மூலம் இண்டு இடுக்கு வரை பிரபலமான தீ ,இப்பாடலின் மூலம் தன்னை தக்கவைத்து கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது .
அழகான கண்கள்
இந்த பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஜனனி ,அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறார்.மேலும் அவரது ரசிகர்கள் ,அவரது அழகை மட்டும் அல்லாமல் கண்ணை ,மூக்கையும் தனித்தனியாக வர்ணித்து வருகின்றனர் .உங்க கண்ணு செம்ம போங்க என்று பல கமெண்ட்டுகளை குவிகின்றது அந்த வீடியோ.
செம்ம கலாய்
சினிமா நட்சத்திரங்கள் ஒரு பக்கம் இந்த பாடலை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் நேரத்தில்,இந்த வேலையை யாரு பார்த்தா என்று கேட்கும் அளவிற்கு ,இந்த பாடலுக்கு அரசியல் தலைவர்களையும் வைத்து பல மீம்ஸ் மற்றும் வீடியோ எடிட் செய்து வச்சி செய்துள்ளனர் நெட்டிசன்ஸ் .அந்த வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது .


Click it and Unblock the Notifications











