கோஸ்ட் ஸ்டோரீஸ்... குறும்படங்களில் தடம் பதிக்கும் ஜான்வி கபூர்

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கத்தில் வெப் சீரிஸ் மாதிரியான குறும்படங்களில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர் என்றாலே இன்றைய பாலிவுட் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் நெஞ்சில் குளிர் பாய்ந்ததுபோல் ஒரு குஜால் வந்துவிடும். எப்போதும் ஒரு உற்சாகமான புன்னகை, துள்ளலான நடை உடை பாவனை இவை அனைத்தும் பலரையும் கவனிக்க வைத்தது.

Janhvi Kapoor Acts In Short films

அம்மா ஸ்ரீதேவியைப் போலவே ஜான்வி கபூரும் தொடர்ந்து நல்ல படங்களையே தொடர்ந்து தேர்வு செய்து நடிக்கும் முனைப்பில் உள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான தடக் திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஜான்வி கபூர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தான், பல இயக்குநர்களிடம் இருந்தும் இவருக்க வாய்ப்புகள் வந்து கதைவை தட்டினாலும், படங்களை தேர்வு செய்வதில் மிகவும் நிதானமாகவே இருக்கிறார்.

தற்போது தோஸ்தானா 2, மற்றுமொரு ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதுதவிர அஜித்தின் 60வது படத்தின் மூலம் தமிழிலும் கால்பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜான்விக்கு கபூருக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இணையதளத்தில் இருக்கிறது. அடிக்கடி ஃபோட்டோ சூட் செய்து இளைஞர்களை தன் கைக்குள் வைத்து இருக்கிறார். இந்த நிலையில், அனுராக் காஷ்யாப், கரண் ஜோகர், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகியோர் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற பெயரில் வெப்சீரிஸ் மாதிரியான குறும்படங்களை எடுக்கின்றனர். இதில் ஜோயா அக்தர் இயக்கும் குறும்படத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இவருடன் விஜய் வர்மாவும் நடிக்கிறார். இத்தகவலை ஜான்வி கபூர் தன் நண்பர்கள் அனைவரிடமும் தெரிவித்து வருவது மட்டுமில்லாமல், இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை எப்படி எல்லாம் செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார். ன்வி கபூரின் பப்லி ப்ளஸ் ஹாட் ஸ்டில்ஸ் அவருடைய சினிமா வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X