Janhvi Kapoor: காதலர் தினத்துக்கு வெல்வெட் கேக் போல ரெடியான ஜான்வி கபூர்.. கொடுத்து வச்ச காதலர்!
மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜிவ்வென வசியம் செய்து வருகிறது.
மராத்தியில் வெளியாகி பல விருதுகளை குவித்த சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்த ஜான்வி கபூருக்கு இப்போது 26 வயதாகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பவே 23.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

காதலர் தினத்துக்கு ரெடி: சிகப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு V day energy என காதலர் தினத்துக்கு ரெடியாகி விட்டேன் என்கிற அறிவிப்பை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளார் ஜான்வி கபூர். அவரது லேட்டஸ்ட் பிக்ஸ் எக்கச்சக்க லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகிறது.

ரெட் வெல்வெட் கேக்: ரெட் கலர் கவுனில் செம கிளாமராக போஸ் கொடுத்து ரெட் வெல்வெட் கேக் போலவே ரெடியாகி நிற்கிறார் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பல முன்னணி நடிகர்களே ஜான்வி கபூர் உடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு நடித்து விட மாட்டோமா என முயற்சி செய்து வருகின்றனர்.

கொடுத்து வச்ச காதலர்: ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில், ரெட் கலர் கார்ஜியஸ் உடையில் ஜான்வி கபூரை பார்த்த ரசிகர்கள் இவரை கட்டிக்கப் போறவர் ரொம்பவே கொடுத்து வச்சவர் என்றும் காதலர் ரொம்பவே லக்கி என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
குவியுது லைக்ஸ்: ஒட்டுமொத்த ஷேப்பும் தெரியும் வகையில் உடம்பை ஒட்டிய ஆடையில் ஜான்வி கபூர் வெளியிட்டு இருக்கும் அசத்தலான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஜான்வி கபூருக்கு ஐ லவ் யூ என கமெண்ட் பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











