கசிந்த ஜான்வி கபூரின் உரையாடல்?.. ராம் சரண், புச்சி பாபுக்கு விளாசலா.. பஞ்சாயத்து ஆரம்பம் போலயே!
சென்னை: நடிகை ஜான்வி கபூர் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவரது பெயரில் சில தனிப்பட்ட உரையாடல் புகைப்படங்கள் (Chat Screenshots) இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது இவரது 'பெத்தி' படம் வெளியான சில நாட்களில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த படம் அவருக்கு தெலுங்கில் இரண்டாவது படம் என்பதால், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா வட்டாரத்திலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
வைரலாகி வரும் அந்த உரையாடல்களில் பல சுவாரசியமான மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, படப்பிடிப்பின் போது குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிக்க ஜான்வி கபூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த காட்சிகளுக்கு நடிகர் ராம் சரணும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த காட்சிகளை எடுக்க முயன்ற இயக்குனர் மீது ராம் சரண் கோபப்பட்டதாகவும், இதனால் ராம் சரண் ஒரு சிறந்த மனிதர் என்றும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு பிரிவாகப் பிரிந்த தெலுங்கு ரசிகர்கள்: இந்த விவகாரத்தில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தற்போது இரு பிரிவாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்று உறுதியாக கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, ஜான்வி கபூரின் வளர்ந்து வரும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டு இப்படிச் செய்யப்படுவதாக பேசி வருகிறார்கள். இதற்கிடையே, உண்மைத்தன்மையை முழுமையாக அறியாமல் யாரும் இந்த புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

திரைப்பட வசூலை பாதிக்குமா?: ஜான்வி கபூர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள 'பெத்தி' படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மூன்று நாளில் ரூபாய் 236 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது வெடித்துள்ள இந்த தேவையற்ற சர்ச்சை, படத்தின் வசூலையும் வெற்றியையும் பாதிக்குமோ என்ற அச்சம் படக்குழுவினரிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ஜான்வியின் நடிப்பு மற்றும் திறமை பற்றிய பேச்சுகள் குறைந்து, தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இந்த சர்ச்சை குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம் கொடுப்பார்களா?: இந்த விவகாரம் குறித்து நடிகை ஜான்வி கபூர் தரப்பிலிருந்தோ அல்லது 'பெத்தி' படக்குழுவினரிடமிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. இதனால் படக்குழுவினர் அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்று திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது. நிலவி வரும் குழப்பங்கள் நீங்க வேண்டும் என்றால் முறையான அறிவிப்பு அவசியம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்த இக்கட்டான சர்ச்சையை ஜான்வி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது மிக முக்கியமானது என்றாலும், அவரது திறமைதான் இறுதியில் அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications