பார்த்து இடிச்சிக்கப்போகுது.. ரிஹானாவுடன் ஆட்டம் போட்ட ஜான்வி கபூர்.. கண் கொள்ளா காட்சியா இருக்கே!

ஜாம் நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கோலாகலமாக திருமணத்துக்கு முந்தைய விழா நேற்று குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ஜாம் ஜாம் என நடைபெற்றது.

பாலிவுட் பிரபலங்கள் முதல் டோலிவுட் பிரபலங்கள் வரை பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி என பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

Janhvi Kapoor dance with pop star Rihanna at Anant Ambani wedding bash video trending

அமெரிக்காவின் பாப் பாடகியான ரிஹானா குஜராத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இசைக்கச்சேரி அரங்கேற்றினார். அவருடன் இணைந்து தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் நடிகை ஜான்வி கபூர் போட்ட குத்தாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஷாருக்கான் முதல் ராம்சரண் வரை: அம்பானி வீட்டு திருமணம் என்றதும் இந்திய சினிமா நடிகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியாபட், தீபிகா படுகோன், கியாரா அத்வானி, ஜான் ஆபிரகாம், அனில் கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் அந்த விழாவில் பங்கேற்றனர். இயக்குனர் அட்லீ மற்றும் ராம்சரண் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்களும் குடும்பத்துடன் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

52 கோடி ஆட்டம்: தனது மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானாவின் கச்சேரியை நேற்று அம்பானி நடத்தி இருந்தார். ரிஹானா இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 52 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிஹானா உடன் ஜான்வி கபூர் நடனம்: மேடையில் ஆடலும் பாடலும் என ரிஹானா அசத்திய நிலையில், கீழே இறங்கி வந்து பாலிவுட் பிரபலங்கள் இருந்த இடத்திலும் அவர் நடனம் ஆடினார். அப்போது அவருடன் இணைந்து கொண்டு இளம் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் போட்ட குத்தாட்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி கபூர் ஷேர் செய்துள்ளார். மேலும், ரிஹானாவை கடவுள் என்றே குறிப்பிட்டுள்ளார்.

பார்த்து இடிச்சுட போகுது: ரிஹானா மற்றும் ஜான்வி கபூர் இருவரும் படு கவர்ச்சியாக நடனமாடிய நிலையில், பார்த்து இடிச்சுட போகுது என நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், நைட் பார்ட்டியில் என்னவெல்லாம் கூத்து நடைபெற்றதோ என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X