வழுவழுப்பான முதுகை காட்டி..ரசிகர்களை திணரடித்த ஜான்வி கபூர் !
மும்பை: தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அம்மாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என பாலிவுட் திரைத்துறையில் பம்பரமாய் சுற்றி வருபவர் இளம் கதாநாயகி நடிகை ஜான்வி கபூர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது கார்த்தி ஆர்யனுடன் இணைந்து தோஸ்தானா பாகம் இரண்டில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் மலையாள திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடித்து வரும் இவர் இப்போது பளிங்கு போன்ற தனது முதுகை காட்டிக் கொண்டு பற்ற வைக்கும் பார்வையால் சுட்டெரித்து வருகிறார்.

பெயரை காப்பாற்ற
பாலிவுட்டில் அனைவரும் விரும்பும் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஜான்வி கபூர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததை அடுத்து அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் இப்பொழுது தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறப்பு தோற்றத்திலும்
2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.

மூக்கின் மேல் விரல்
இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் என்ற பயோ பிக் திரைப்படம் அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது. அந்த அளவிற்கு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ஜான்விக்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மற்றொரு புறம் திரைப்படங்களும் குவிந்து வருகிறது.

இந்தி ரீமேக்கிலும்
இளம் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து தோஸ்தானா பாகம் இரண்டில் நடித்து வரும் ஜான்வி கபூர் அதைத் தொடர்ந்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.

ஒரு நிமிசம் மூச்சே நின்று
இவ்வாறு திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மலைக்க வைத்து வந்த ஜான்வி கபூர் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிங்கு போல இருக்கும் தனது முதுகைக்காட்டிக் கொண்டு பற்ற வைக்கும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் சுட்டெரிக்கும் இந்த கவர்ச்சி மிகுந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மூச்சே நின்று போச்சு என ரசித்து வர்ணித்து கொண்டாடி வருவதோடு இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











