எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்.. 2020 ஆம் ஆண்டை சிறப்பாக செய்து காட்டிய ஜான்வி கபூர்!
மும்பை : 2020ஆம் ஆண்டு பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் ஒரு வழி செய்து விட்டது என்றே தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை என இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரபலங்களை காட்டிலும் பல மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் தொடங்க முடியாமல் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஆட்டிப்படைத்து வருகிறது.
இவ்வாறான சூழலில் நடிகை ஜான்வி கபூர் 2020ஆம் ஆண்டு எவ்வாறு இருந்தது என்பதை இரண்டு புகைப்படங்களின் மூலம் கூறியிருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

ஒரு முடிவில்லாமல்
2020ஆம் ஆண்டு ஆரம்பமெல்லாம் அமர்க்களமாக வழக்கம் போல மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இந்தியாவை பொருத்தவரை மார்ச் மாதம் தொடங்கிய கொரானா பிரச்சினை இன்று வரை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே போகிறது.

இருண்டு போயுள்ள
இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மிக முக்கிய பொழுதுபோக்கு துறையான திரைப்படத் துறையும் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. படப்பிடிப்புகள் இல்லாமல் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகாமல் என எந்த ஒரு அசைவும் இல்லாமல் திரையுலகம் கடந்த சில மாதங்களாகவே இருண்டு போயுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

ஓடிடி தளத்தில்
பாலிவுட்டில் பிரபல நடிகையும் மூத்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், இவரின் சமீபத்திய "குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்" திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியது.

ஹெலன் ஹிந்தி ரீமேக்கில்
இளம் நடிகையான ஜான்வி கபூர் தரமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற "ஹெலன்" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நிஜமாகவே அவருடன் டேட்டிங்
தோஷ்தானா 2ல் கார்த்திக் ஆர்யானுடன் ரீல் ரோமன்ஸ் செய்து வரும் ஜான்வி கபூர் நிஜமாகவே அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் சில வதந்தி சமீபகாலமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் அதைப்பற்றிய கிசுகிசுக்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

செம்ம கெத்தாக
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டை பிரதிபலிக்கும் வகையில் ஜான்வி இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் முதல் புகைப்படத்தில் செம்ம கெத்தாக இருக்கின்ற மாதிரியும், இரண்டாவது புகைப்படத்தில் நாக்கு தள்ளுது டா சாமி என்றவாறும் வெளியிட்டுள்ள இந்த இரண்டு புகைப்படங்களும் அனைவரையும் கவர்ந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது கமெண்டுகளை பதிவு செய்து வர ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











