இவங்களுக்கே இந்த நிலைமையா?ஆபாசமாக மார்பிங் செய்த போட்டோ.. ஜான்வி கபூர் வேதனை!

சென்னை: ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வலம் வருவதாக நடிகை ஜான்வி கபூர் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் தடக் என்ற படம் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.

Janhvi Kapoor is angry about the morphing pictures that are trending on the internet

இவர் கோலாமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்திலும், மலையாள படமான ஹெலன் படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார்.

Janhvi Kapoor is angry about the morphing pictures that are trending on the internet

தேவரா படத்தில்: நடிகை ஜான்வி கபூர் என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா படத்தில் அவருக்கு ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இதன் மூலம் அவர், தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Janhvi Kapoor is angry about the morphing pictures that are trending on the internet

ஜான்வி கபூர் பேட்டி: இந்நிலையில்,ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜான்வி கபூர், AI தொழில்நுட்பம் என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இது தன்னை பெரிய அளவில் பயமுறுத்துகிறது. பள்ளி பருவத்தில் அவர் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி விவரித்த ஜான்வி, தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் யாஹூ நிறுவனத்தின் வலைதளத்தில் தானும் நடிகையாக மாற உள்ளதாக ஒரு செய்தி வந்ததை கண்டு அதிர்ந்து போனேன். எப்போதோ அப்பா மற்றும் அம்மாவுடன் பொதுஇடத்தில் வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டு அவ்வாறு செய்தி வெளியிட்டு இருந்தனர்.

Janhvi Kapoor is angry about the morphing pictures that are trending on the internet

மார்பிங் செய்த போட்டோ: அது மட்டுமல்லாமல் ஏறத்தாழ அனைத்து ஆபாச இணையதளங்களிலும் என்னுடைய புகைப்படங்கள் மார்பின் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இளம் நடிகையான என்னுடைய திரை வாழ்க்கைக்கு மாபெரும் இடையூறாகவே உள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலிலேயே தாய் மற்றும் தந்தை திரைத்துறையில் இருந்த காரணமாக அவர்கள் மீது படும் அந்த லைம் லைட் தன் மீதும் பட்டது.

Janhvi Kapoor is angry about the morphing pictures that are trending on the internet

வேதனை அளிக்கிறது: அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இன்றளவும் பல்வேறு ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையின் மகளாக திரைத்துறைக்குள் நுழைந்த ஜான்வி கபூருக்கே இந்த நிலைமையான என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X