அடேங்கப்பா, ஸ்ரீதேவி மகளுக்கு கீர்த்தி சுரேஷ் மீது இவ்வளவு பாசமா?

By Siva

Recommended Video

படம் மூலமாக அரசியலில் நுழையும் அஜித் | Cine with Mini - வீடியோ

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு தான் கீர்த்தி சுரேஷ் மீது என்ன ஒரு பாசம்!

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி.

கீர்த்தியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைப்பது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

 ஜான்வி

ஜான்வி

மகாநதி படம் பார்த்ததில் இருந்து கீர்த்தி மீது பைத்தியமாக உள்ளார் ஜான்வி. இந்நிலையில் கீர்த்தியின் அழகிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவரை பாலிவுட்டிக்கு வரவேற்றுள்ளார் ஜான்வி கபூர்.

அர்ஜுன் கபூர்

போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும் கீர்த்தி சுரேஷை பாலிவுட்டுக்கு வரவேற்று ட்வீட் போட்டுள்ளார். தனக்கு பிடித்த நடிகையை தன் தந்தை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைப்பது ஜான்விக்கு பெருமையாக உள்ளதாம்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் செல்வதில் கீர்த்தி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். தான் நடிக்கும் இந்தி படம் அனைத்து இந்தியர்களையும் பெருமையடையச் செய்யும் என்கிறார் அவர். அத்தகைய படத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என்று கீர்த்தி தெரிவித்துள்ளார்.

 பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பாலிவுட் செல்லும் கோலிவுட் நடிகைகள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் கதாபாத்திரம் பெரிதாக இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிடுகிறார்கள். கீர்த்தி விஷயத்தில் அப்படி நடக்காமல் இருந்தால் சரி. சூதானமாக இருங்க கீர்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X