Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிங்க் நிற உடையில் கவர்ச்சி சூறாவளியாய் ஸ்ரீதேவி மகள்... வைரலாகும் புகைப்படங்கள்!
மும்பை : நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள்.
பாலிவுட்டில் இவர் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
மாளுமா வாட் இஸ் திஸ்? முகம் சுளிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!
அவ்வப்போது புதிய போட்டோஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஜான்வி கபூர்
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தடாக் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜான்வி. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

நயன்தாரா ரோலில் ஜான்வி
தமிழில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது ஜான்வி லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு குட்லக் ஜெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

மலையாள ரீமேக்கில் ஜான்வி
தொடர்ந்து மலையாள ரீமேக்கான ஹெலன் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். விரைவில் குட்லக் ஜெர்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களிலும் இவர் மிகவும் பிசி. அவ்வப்போது போட்டோஷுட்களை நடத்தி கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு ட்ரெடிஷனலான உடைகளும் சிறப்பாக பொருந்துகிறது. சமீபத்தில் பிகினி உடையில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை பாடாய் படுத்தியது.

ஆன்மீக சுற்றுலா
நடிகை சமந்தாவை போல சமீபத்தில் ஜான்வி மற்றும் சாரா அலி கான் இருவரும் ஆன்மீக சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வைரலானது. தொடர்ந்து தன்னை பரபரப்புடன் வைத்துக் கொண்டுள்ளார் ஜான்வி. இதேபோல தீபாவளியையொட்டி தன்னுடைய குடும்பத்தினருடன் இவர் வெளியிட்ட புகைப்படங்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இருந்தது.

புதிய போட்டோஷுட்
இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர். இந்தப் படத்தில் பிங்க் நிற மாடர்ன் உடையில் கலக்கல் சூறாவளியாய் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் கவர்ச்சியில் அள்ளுகிறது. ரசிகர்களை கிறங்கடிக்கவும் செய்கிறது.