அந்த இயக்குநரின் படம் என்றால் அப்படிக்கூட நடிப்பேன்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஓபன் டாக்
மும்பை: ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் ஹிந்தியில் பிஸி ஆர்ட்டிஸ்ட். ஆனால் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருந்த தேவரா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் விரைவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இயக்குநர் ஒருவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 80களில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்திய அவர் பான் இந்தியா ஹீரோயினாக பட்டையை கிளப்பினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது. கண்டிப்பாக ஜான்விக்கென்று வளமான எதிர்காலம் சினிமாவில் உண்டு என ஆரூடம் கூறப்பட்டது.

பிஸியான ஜான்வி: ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவிலும் ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவரா படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார். அப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
கான்ஸ் திரைப்பட விழாவில்: இப்போது ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்கும் அவர்; விரைவில் தமிழிலும் அறிமுகமாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர் கடைசியாக நடித்த ஹோம் பவுண்ட என்ற படம் சமீபத்தில் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்படத்தின் திரையிடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் இயக்குநர் குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார் ஜான்வி.
என்ன புகழ்ந்தார்?: அவர் அளித்த பேட்டியில், "ஹோம் பவுண்ட் பட இயக்குநர் நீரஜின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் இருந்து நிறைவேறிவிட்டது. அவரது இயக்கும் படத்தில் ஒரு மரமாக நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன்" என கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











