ம்ஹூம்.. சொன்னா கேளுங்க.. தமிழ், தெலுங்குல நான் நடிக்கலை..பிரபல ஹீரோயின் மகள் திடீர் விளக்கம்!
மும்பை: தமிழ், தெலுங்கில் இப்போது நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரபல ஹீரோயின் மகள்.
Recommended Video
நடிகை ஸ்ரீதேவி- இந்தி தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள்.
நடிகை ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார்.

கோஸ்ட் ஸ்டோரிஸ்
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் என்ற இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இஷான் கட்டார் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். கரண் ஜோஹர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஷசாங் கைதான் இயக்கி இருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. அடுத்து கோஸ்ட் ஸ்டோரிஸில் நடித்திருந்தார்.

பெண் விமானி
இதையடுத்து குஞ்சன் சக்ஸேனா: த கார்கில் கேர்ள் என்ற படத்தில் நடிக்கிறார். இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியின் கதையான இதை சரண் சர்மா இயக்குகிறார். பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி உட்பட பலர் நடிக்கின்றனர். இதையும் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். அடுத்து ரூஹி அஃப்ஸானா என்ற ஹாரார் காமெடி படத்தில் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா
பின்னர் கார்த்திக் ஆர்யனுடன் தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் புரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக, ஃபைட்டர் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் தமிழ், தெலுங்கில் அவர் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

தமிழ், தெலுங்கில்
இதையடுத்து அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையே, தெலுங்கு படம் ஒன்றில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. சுகுமார் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக அவர் நடிக்க இருப்பாதக் கூறப்பட்டது. இதுபற்றி அவர், இப்போது தமிழ், தெலுங்கில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அப்படி இருந்தால் நானே தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அம்மாவின் வாசனை
தற்போது கொரோனாவால் மற்றவர்களைப் போல வீட்டுக்குள் இருக்கிறார். இவர், கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் சில விஷயங்களை கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி உருக்கமானப் பதிவு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு அவர் வெளியிட்டிருந்தார். அதில் அம்மாவின் வாசனையை அவரது டிரெஸ்சிங் உணர்வதாகத் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











