Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜான்வி கபூர் நடித்துள்ள அந்த பயோபிக் படமும் ஒ.டி.டியில் ரிலீஸ் ஆகிறது.. அறிவித்த நெட்பிளிக்ஸ்!
மும்பை: நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள அந்த பயோபிக் படமும் ஒ.டி.டி.யில் நேரடியாக வெளியாக இருக்கிறது.
சரண் சர்மா இயக்கத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள படம், குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்.
கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் இது. ஜீ ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளது.
வாவ்.. போன தடவை விஜய்சேதுபதி.. இந்த முறை யார் தெரியுமா? அடுத்த லைவ் பேட்டிக்கு தயாரான உலகநாயகன்!
குஞ்சன் சக்ஸேனா
இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி, வினித்குமார் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்திய விமானப்படையில் பணியாற்றிய பெண் விமானியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கார்க்கில் போரின் போது வீரர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர்களை இயக்கிய விமானி இவர். இதற்காக இவர் விருதும் பெற்றிருந்தார்.
கொரோனா காரணமாக
குஞ்சன் சக்ஸேனா கேரக்டரில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக பல படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது. அதில் இந்தப் படமும் ஒன்று. இந்நிலையில் லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் உடனடியாகத் திறக்கப்படாது என்பதால், பல தயாரிப்பாளர்கள், ஒ.டி.டி. தளங்களில் படங்களை நேரடியாக வெளியிட்டு வருகின்றனர்.
வித்யா பாலன்
தமிழில், பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் வெளியானது. அடுத்து பெங்குயின் உட்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தியிலும் பல படங்கள் ஒ.டி.டி.தளங்களில் வெளியாக உள்ளன. அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடித்துள்ள, 'குலாபோ சிதாபோ', வித்யாபாலன் நடித்துள்ள 'சகுந்தலா தேவி', அக்ஷய்குமாரின் லக்ஷ்மி பாம் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.
நெட்பிளிக்ஸ்
அந்த வரிசையில் 'குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் படமும் ஒ.டி.டி.தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வெளியாகும் என்கிற தேதியை தெரிவிக்கவில்லை. தனது இன்ஸ்டாகிராமில் இந்த படத்தின் புதிய போஸ்டரையும் படம் பற்றிய அறிமுகத்தையும் கொடுத்திருக்கிறார், நடிகை ஜான்வி கபூர்.