Janhvi Kapoor: முதலமைச்சர் பேரனையே மடக்கிய ஜான்வி கபூர்.. திருமணம் எங்கே நடக்கப்போகுது தெரியுமா?
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
தென்னிந்தியாவில் ஸ்ரீதேவியின் மகளுக்கு மிகப்பெரிய கிரேஸ் இருப்பதை புரிந்து கொண்டவர் டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் இருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்சரண் ஜோடியாக ஆர்சி 16 படத்திலும் இணைந்துள்ளார்.

நடிகை ஜான்வி கபூர் அடிக்கடி தனது பாய் பிரண்டுடன் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவரது காதலர் குறித்தும் திருமணம் குறித்தும் சூடான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீதேவி மகள்: கந்தன் கருணை, துணைவன், நம்நாடு, குலவிளக்கு, பெண் தெய்வம், என் அண்ணன், பாபு, ஆதிபராசக்தி, அகத்தியர், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவி மூன்று முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஸ்ரீதேவி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார். தயாரிப்பாளர் போனி கபூரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் பிறந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி துபாயில் பாத்ரூமில் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை ஜான்வி கபூர் படங்கள்: 2018 ஆம் ஆண்டு சைரவத் எனும் மராத்தி படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், கஞ்சன் சக்சேனா, ரூகி. மிலி, குட்லக் ஜெர்ரி, பவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படம் ஜான்வி கபூருக்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் பேரன்: நடிகை ஜான்வி கபூர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுசில் குமார் சண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஜான்வி கபூர் ஷிக்கு எனும் பெயர் பொறிக்கப்பட்ட செயினை கழுத்தில் அணிந்து கொண்டு அப்பா போனி கபூர் தயாரிப்பில் வெளியான மைதான் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
திருப்பதியில் திருமணம்: இந்த ஆண்டு ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா திருமணம் நடைபெறப் போவதாகவும் திருப்பதியில் தான் திருமணம் நடைபெறும் என தகவல்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. ராம்சரண் படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்வாரா? என்பது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











