சென்னை ஸ்பெஷல்.. கடமைப்பட்டிருக்கேன்..கொஞ்சும் தமிழில் பேசிய ஜான்வி கபூர்.. கோலிவுட் என்ட்ரி எப்போ?

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜான்வியின் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படமானது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் சூடுபிடித்திருக்கும் நிலையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

janhvi kapoor devara junior ntr

ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேவரா 1 படத்தில் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

கொஞ்சும் தமிழில் ஜான்வி: இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருப்பதையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இந்தச் சூழலில் நேற்று சென்னையில் படக்குழு ப்ரோமோஷனில் ஈடுபட்டது. அப்போது பேசிய ஜான்வி தனது பேச்சை தமிழில் ஆரம்பித்தார். அவர் பேசுகையில், " எல்லோருக்கும் வணக்கம். சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனது அம்மாவுடன் இருந்த சிறந்த நினைவுகள் எல்லாம் சென்னையில்தான் இருக்கிறது.

நீங்கள்தான் காரணம்: நீங்கள் எனது அம்மா மீது காட்டிய அன்புதான் நானும், எனது குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கான காரணம். நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்"" என்றார். ஜான்வி இவ்வளவு அழகாக தமிழ் பேசியதை அடுத்து அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கியது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ இன்னும் என்ன தாமதம் ஜான்வியை கோலிவுட்டில் இறக்கிவிடுங்க என்று கமெண்ட்ஸ் செய்து ஜான்வி பேசியதை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X