அப்படியே ஸ்ரீதேவியை பார்த்த மாதிரி இருக்கு.. ஜாக்கெட் அணியாமல் ஜான்வி கபூர் வெளியிட்ட பிக்ஸ்!

மும்பை: நடிகை ஜான்வி கபூர் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலையை அணிந்து கொண்டு கொடுத்த ஹாட் போஸ் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன.

தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

தமிழில் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக NTR30 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

போனி கபூர் பொண்ணு

போனி கபூர் பொண்ணு

நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக நடிகர் அஜித்தின் 3 படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் கடந்த 2018ல் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

ரீமேக் படங்கள்

ரீமேக் படங்கள்

அறிமுக படமே மராத்தியில் வெளியான சைரட் படத்தின் ரீமேக் தான். மேலும், ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கான மிலி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட ரீமேக் படங்களில் நடித்துள்ளார் ஜான்வி கபூர். ஆனால், இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரியளவில் இதுவரை வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டா கவர்ச்சி

இன்ஸ்டா கவர்ச்சி

ஆனால், இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே இணையத்தை சூடாக்கி முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு இவருக்கு இன்ஸ்டாகிராமில் 21.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படங்கள் மற்றும் படு தாராளமான கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் என போட்டுத் தாக்கி வருகிறார் ஜான்வி கபூர்.

ஜாக்கெட் அணியாமல்

ஜாக்கெட் அணியாமல்

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு வந்த நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட்டாக வெறும் சேலையை மட்டும் உடுத்திக் கொண்டு ஜாக்கெட் அணியாதது போல செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ரொம்பவே உஷ்ணப்படுத்தி வருகிறார்.

அப்படியே ஸ்ரீதேவியை போல

அப்படியே ஸ்ரீதேவியை போல

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மா ஸ்ரீதேவியை போல இருக்கீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தலையில் பூ வைக்கவில்லை, கண்களில் கருமை தீட்டவில்லை என சோகமே உருவாக உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர் ஜோடி

ஜூனியர் என்டிஆர் ஜோடி

தமிழ் படங்களில் நடிக்கப் போவதாக பரவிய தகவல்களை போனி கபூர் மறுத்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்கிற தகவல் அதிரடியாக வெளியான நிலையில், டோலிவுட் ரசிகர்கள் எல்லாம் ஜான்வி கபூர் வருகைக்காக ஜொள்ளு விட்டு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X