தமிழில் புத்தாண்டு வாழ்த்து.. சேலையில் ஜான்வி கபூரின் க்யூட் வீடியோ.. பா.ரஞ்சித் படத்தில் அறிமுகம்?

சென்னை: தமிழ் திரையுலகில் 80களை கலக்கிய நடிகைகளின் வாரிசுகளில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோயினாக இந்தியாவை கலக்கி வருகின்றனர். பாலிவுட்டில் பிரபலம் அடைந்து பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து மறைந்த நடிகையின் வாரிசு தற்போது நடிகையாக உச்சம் பெற்று வருகிறார். பாலிவுட்டில் அறிமுகம் ஆனாலும், அந்த இளம் நடிகைக்கு அம்மாவை போல தென்னிந்தியாவில் பிரபலம் ஆக துடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று இளம் நடிகை கலக்கலாக பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழை தொடர்ந்து தெலுங்கு, மராத்தி, மலையாளம் இந்தி மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் 80களிலேயே லட்சங்களை தாண்டி கோடியில் சம்பளம் பெற்ற முதல் நடிகையும் இவர் தான். இவர் மறைந்து 8 வருடங்களை கடந்து விட்டன. இந்நிலையில், இவரை போன்றே அவரது திரையுலக வாரிசான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவர் நடித்த முதல் படமே விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. மராத்தியில் மெகா ஹிட்டான சைரத் படத்தின் ரீமேக் தான் தடக். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

janhvi-kapoor-tamil-new-year-wishes-video-viral

தென்னிந்திய படங்களில் ஆர்வம்: தனது அம்மாவை போன்றே ஜான்வி கபூரும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதன் முயற்சியாக ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் பெத்தி படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். அதேபோன்று நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படும் ஜான்வி அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிப்பதற்காக கதைகளையும் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தை போனி கபூர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அம்மா ஸ்ரீதேவியை போன்று அவரும் மக்களின் மனதில் இடம் பிடிக்க ஜான்வியும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

இளைஞர்களுக்கு பிடித்த நடிகை: திரையுலகில் நடிகைகளின் வரவு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெறுவது ஒரு சிலர் மட்டுமே. அவர்களது பெயர்களை மறக்க முடியாத அளவிற்கு அவர்களது படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் ஜான்வி கபூரும் இன்றைய இளையதலைமுறைக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் காந்தியையும், அம்பேத்கரை பற்றி பேசியிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானதை பார்த்து ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்க தொடங்கி விட்டனர். மேலும், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸிலும் ஜான்வி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகமாக இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

janhvi-kapoor-tamil-new-year-wishes-video-viral

தமிழ் புத்தாண்டு வாழ்த்து : பாலிவுட் குயினாக கருதப்பட்டாலும் அவ்வப்போது ஜான்வி கபூரின் செயல்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. அம்மாவை போன்றே தமிழை நன்றாக பேசுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் பேசும் தமிழை கேட்டு ரசிகர்களும் ஐஸ் கட்டி போல் உருகிவிடுகிறார்கள். குறிப்பாக, ஜான்வி கபூர் தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய பண்டிகை அல்லது விழாக்களுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிடுவார். இதன் மூலம் தமிழை மறக்காத ஸ்ரீதேவியின் மகளாக இருக்கிறார் என்றும் சிலாகிப்பார்கள். அதேபோன்று தமிழ் புத்தாண்டான இன்று ஜான்வி தமிழில் வாழ்த்து சொல்லி பேசியிருக்கும் க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நாள் எல்லோருக்கும் இனிய நாளாக இருக்க வேண்டும். கடவுளே வேண்டி கொள்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X