தெலுங்குல விஜய் தேவரகொண்டா, தமிழ்ல..? ஶ்ரீதேவி மகளின் அதிரடி அறிமுகம்

By

மும்பை: தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக, ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான தெலுங்கு ஹீரோ, விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Janhvi Kapoor, Vijay Deverakonda to Come Together for Puri Jagannadhs Next?

இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 30 படங்களுக்கு மேல் இயக்கியவர்.

இந்தப் படத்தை, இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய படத்தில் அவர் அறிமுமாக உள்ளார்.

Janhvi Kapoor, Vijay Deverakonda to Come Together for Puri Jagannadhs Next?

முதலில் ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோர் பெயர்தான் நடிப்பதற்கான பரிசீலனையில் இருந்தது. பின்னர் கரண் ஜோகர், ஜான்வி கபூர் பெயரை, புரி ஜெகந்நாத்துக்கு சிபாரிசு செய்துள்ளார். இதையடுத்தே அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பின் மீது மரியாதை இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த ஜான்வி, இப்போது அவருடன் நடிக்க உள்ளார்.

Janhvi Kapoor, Vijay Deverakonda to Come Together for Puri Jagannadhs Next?

மறைந்த நடிகை ஶ்ரீதேவி, தமிழ், தெலுங்கில் மிரட்டிவிட்டுத்தான் இந்திக்கு சென்றார். தன் மகள் ஜான்வியை, சிறந்த கதையில் தமிழ், தெலுங்கில் அறிமுகப்படுத்த நினைத்திருந்தார்.

அவர் மறைவுக்குப் பின் தெலுங்கு அறிமுகம் ஓகே ஆகிவிட்டது, ஜான்விக்கு. தமிழில் யார் ஜோடியாக அறிமுகமாகப் போகிறார் என்பது கோலிவுட்டின் கோலாகல எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒருவேளை இந்தப் படத்தையே தமிழ், தெலுங்கில் உருவாக்கும் திட்டமும் இருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X