தள்ளிவிடாதீங்க ப்ளீஸ்.. திருப்பதி கோயிலில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்.. மயிலு மகள் மனசே மனசு தான்!
திருப்பதி: ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாவதை முன்னிட்டு இன்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சந்தன கலர் சேலையை அணிந்துக் கொண்டு அழகு மங்கையாக மயிலு மகள் ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததை பார்த்த ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் அவரை சூழ்ந்து கொள்ள பார்த்தனர்.
அப்போது கூட சென்றவர்கள் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஜான்வி கபூர் நடந்து செல்வதற்காக பாதையை கிளியர் செய்ய பார்த்த போது, ஜான்வி கபூர் பண்ண விஷயங்கள் வீடியோவாக வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

தென்னிந்திய பக்கம் திரும்பிய ஜான்வி கபூர்: சைரட் எனும் மராத்தி படத்தின் ரீமேக்கான தக் தக் படத்தின் மூலம் பாலிவுட்டில் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் நடித்து பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமானார். நெபோடிஸம் சர்ச்சையில் இவரது பெயர் அதிகளவில் அடிபட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர் முதன்முறையாக தென்னிந்தியா பக்கம் திரும்பி டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் படத்தில் நடித்து வருகிறார்.

திருப்பதியில் ஜான்வி கபூர்: திருப்பதியில் லட்டுக்கு பதிலாக என்ன திடீரென ஜாங்கிரி இருக்கே என ரசிகர்கள் #DevaraGlimpse ஹாஷ்டேக்கில் ஜான்வி கபூர் திருப்பதிக்கு விசிட் அடித்ததை வைத்து வர்ணித்து வருகின்றனர். திருப்பதி கோயிலுக்கு அழகாக பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு பவ்யமாக இன்ஸ்டாகிராம் பியூட்டியாக இல்லாமல் ஸ்ரீதேவி மகளாக ஜான்வி கபூர் சென்றதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தள்ளிவிடாதீங்க ப்ளீஸ்: ஜான்வி கபூர் செல்லும் போது அவரை சூழ்ந்து கொண்டு பத்திரிகையாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து வரும் நிலையில், சிலர் அவர்களை தள்ளி விட, அவங்களை தள்ளி விடாதீர்கள் ப்ளீஸ் என பதறிப் போய் ஒருவரை தூக்கிவிட ஜான்வி கபூர் ஓடும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

வசூல் வேட்டை: கடந்த ஆண்டு இறுதியில் பிரபாஸின் சலார் படம் மட்டுமே டோலிவுட்டுக்கு பெரிய படமாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு ஜூனியர் என்டிஆரின் தேவரா, மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என வரிசையாக தெலுங்கு சினிமாவிலும் பெரிய படங்கள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











