Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கண்ணைப் பறிக்கும் கட்டழகில் ஜான்வி கபூர் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
சென்னை : நடிகை ஸ்ரீதேவியை தொடர்ந்து அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இப்பொழுது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
தமிழில் நயன்தாராவின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார்.
மிக விரைவிலேயே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக உள்ள ஜான்வி கபூர் இப்பொழுது கண்ணைப் பறிக்கும் கட்டழகில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரிலீசுக்கு தயார்... யு/ஏ சான்றிதழ் பெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
பாலிவுட்டில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஜான் சாக்ஷானா தி கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்

கார்த்திக் ஆர்யானுடன் காதல் கிசுகிசு
இப்பொழுது கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து தோஸ்தானா பாகம் இரண்டில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் ஆர்யானுடன் ஜான்வி கபூர் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்து வருவதால் இப்படத்தில் ரொமான்டிக் காதல் காட்சிகள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படம் ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் ஜான்வி கபூர் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். பஞ்சாபில் இப்படத்தின் படபிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

கண்ணைப் பறிக்கும் கட்டழகை காட்டி
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது இந்தியில் மிலி என்ற பெயரில் தயாராகி வருகிறது. மிகவும் சவாலான இந்த கதையில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜான்வி கபூர் மிக விரைவிலேயே தென்னிந்திய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களை கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் அதிரவைக்கும் ஜான்வி கபூர் இப்பொழுது கண்ணைப் பறிக்கும் கட்டழகை காட்டி அனைவரையும் மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.