Nayanthara: ரூ.200 கோடியில் சொத்து இருந்தும்.. 50 வினாடி விளம்பரத்திற்கு கோடியில் சம்பளம் வாங்கும் நயன்தாரா!
சென்னை: நடிகை நயன்தாரா விளம்பரத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் நேற்று இறைவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

நயன்தாரா: சமூக வலைதளத்திலும் தலைகாட்டாமல் இருந்த நயன்தாராவின் பெயரில் பல்வேறு போலி கணக்குகள் இருந்து வந்த நிலையில், பல பேட்டிகளில் நயன்தாரா தான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்று கூறி வந்தார். அவரது புகைப்படங்களை அவரது கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா, தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும்படி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இன்ஸ்டாகிராமில்: இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் நயன்தாராவை பின் தொடர்ந்து வரும் நிலையில், நயன்தாரா தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, சமந்தா, அபர்ணா பாலமுரளி, கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, அலியா பட், பார்வதி, நிஹாரிகா, ஒபாமாவின் மனைவி மிச்செல், இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், விக்னேஷ் சிவன், ஜெனிபர் லோபஸ் 20 பேரை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார்.

Skin Care: கடந்த சில வருடங்களாவே நயன்தாரா ஒரு புதிய Skin Care நிறுவனத்தை துவங்க ரெடி ஆகி வந்த இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஸ் வெளியிட்டும் வந்தார். இந்த தயாரிப்புகள் இன்று முதல் விற்பனைக்கு வர உள்ளது.
விளம்பரத்திற்கு கோடியில் சம்பளம்: இந்நிலையில்,நடிகை நயன்தாரா விளம்பரத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. வெறும் 50 வினாடி விளம்பரத்துக்காக நயன்தாரா சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாகவும். விளம்பர நேரம் அதிகரிக்கும் பட்சத்தில் சம்பளமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. என்னத்தான் சினிமாவின் மூலம் கோடி கோடியாக பணம் கொட்டினாலும், புது புதுவகையில் சம்பாதித்து தனது சொத்தின் மதிப்பை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











