ஐஸ்வர்யா ராய் அப்படிப்பட்டவர் இல்லை.. நான் ஏன் அப்படி இருக்கணும்.. மாமியார் சொன்ன சீக்ரெட்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கை குறித்து சமீபகாலமாக வதந்திகள் பரவின. அதனை அபிஷேக் பச்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மறுத்திருந்தார். இதனால் இருவரது ரசிகர்களும் நிம்மதியடைந்தனர். இந்தச் சூழலில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவரது மாமியார் ஜெயா பச்சன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் இருவர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒருபக்கம் உலக அழகி பட்டம் வென்றவர் என்ற அடையாளமும், மறுபக்கம் திறமை வாய்ந்த நடிகை என்ற பெயரையும் அவர் பெற்றதன் காரணமாக இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

Aishwarya Rai Jaya Bachchan Abishek Bachchan

தமிழிலும் பிஸி: ஹிந்தியில் படு பிஸியாக இருந்த ஐஸ்வர்யா ராய் தமிழிலும் கவனம் செலுத்த மறக்கவில்லை. இருவர் படத்துக்கு பிறகு அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். முக்கியமாக அவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று அதகளம் செய்திருந்தார். கல்கி கற்பனையாக உருவாக்கியிருந்த அந்தப் பாத்திரத்திற்கு திரையில் உயிர் கொடுத்திருந்தார் ஐஸ்.

திருமணம்: இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், காதலோடும் தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபமாக அவர்கள் பிரியப்போவதாக ஒரு வதந்தி தொடர்ந்து பரவிவந்தது. இருவருமே அதுகுறித்து ஆரம்பத்தில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனால் பரவிய வதந்தி உண்மையோ என்று ரசிகர்கள் எண்ண ஆரம்பித்தனர்.

மறுத்த அபிஷேக் பச்சன்: வதந்தி வேகமாக பரவ ஆரம்பித்ததை அடுத்து அபிஷேக் பச்சன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், 'நாங்கள் பிரியப்போவதாக தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதில் உண்மை எதுவுமே இல்லை. நாங்கள் பிரபலமாக இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக எங்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எங்களை பற்றி கதையும் கட்டுகிறார்கள்' என்று சொல்லி; நிச்சயதார்த்தத்தின்போது அணிந்த மோதிரத்தை காண்பித்து நாங்கள் பிரியவெல்லாம் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜெயா பச்சன்: அதேபோல் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும்தான் பெரும் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாகவும்; ஜெயா ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக ஐஸிடம் நடந்துகொள்வதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயாவிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயா பச்சன். "மகளுக்கும் மருமகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு மகள் தனது பெற்றோரை ரொம்பவே சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு மருமகள் தனது மாமியார், மாமனாரை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது.

ஐஸ்வர்யா ராய் மகள் இல்லை: ஐஸ்வர்யா ராய் எனது மகள் இல்லை மருமகள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது நான் அவரிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும். அவரது அம்மா வேண்டுமானால் அப்படி இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் நான் அப்படி இருந்ததில்லை" என்றார். இதன் மூலம் நீண்ட காலம் பரவிய மற்றொரு வதந்திக்கும் ஜெயா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X