Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் வருகிறார் அம்மா! படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு!
ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது.
தமிழக முதல்வர்களில் அதிகம் கவரப் பெற்றவர் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வராக இருந்தாலும், தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு தலைவியாக இருந்தார். ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக மட்டுமல்லாமல் பெண்ணாக பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
சினிமாவில் நடித்து, பிறகு கட்சிப்பணி ஆற்றி ஆட்சிக்கு வந்து பல சாதனைகளை செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த விப்ரி மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படம் ஜெயலலிதாவின் சாதனைகளை போற்றும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமான நடிகை யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சமீபத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகை வித்யா பாலன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் சில கதாநாயகிகள் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டரை, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.